புது தில்லி, ஜூலை 1 speaker forms committee to frame rules
- மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திங்கள்கிழமை எம்.பி.க்களுக்கு பதவிப் பிரமாணம் மற்றும் உறுதிமொழி எடுக்கும் போது பரிந்துரைக்கப்பட்ட வடிவமைப்பைப் பின்பற்றவும், அரசியலமைப்பின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் வார்த்தைகளைச் சேர்க்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.speaker forms committee to frame rules
- கடந்த வாரம் பதவிப் பிரமாணத்தின் போது பல உறுப்பினர்கள் “ஜெய் சம்விதான்” மற்றும் “ஜெய் இந்து ராஷ்டிரா” என்ற கோஷங்களை எழுப்பியதன் பின்னணியில் அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார் .
- சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.க்களின் பதவிப் பிரமாணம் மற்றும் உறுதிமொழிக்கான விதிகளை வகுக்க ஒரு குழுவை அமைத்துள்ளார்.
- புதன்கிழமை , புதிய மக்களவை அமைக்கப்பட்ட பிறகு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரின் முடிவில்,செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர்,கிரண் ரிஜிஜியு,வாக்குறுதி மீறல்கள் தண்டனைக்கு உட்பட்டது என்றும்,துணை சபாநாயகர் தேர்தல் குறித்து இன்னும் தகவல் எதுவும் இல்லை என்று ரிஜிஜு கூறினார்.
- எம்.பி.க்களாக பதவிப் பிரமாணம் செய்யும் போது உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பிய சம்பவங்கள் பல உள்ளன. ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி பாலஸ்தீனத்தை போற்றி முழக்கத்தை எழுப்பினார், அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் எம்பியான சத்ர பால் சிங் கங்வார், “ஜெய் இந்து ராஷ்டிரா” என்று தனது பதவிப் பிரமாணத்தை முடித்தார்.
- மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடியின் உரையின் போது எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதை அவர் விமர்சித்தார். “ஒருவர் பேசும்போது குறுக்கிடலாம் ஆனால் தொடர்ந்து கூச்சலிடுவதை அனுமதிக்க முடியாது . பிரதமர் நாட்டின் தலைவர் என்பதை காங்கிரஸ் நினைவுகூர வேண்டும் , அந்த நாற்காலிக்கான மரியாதையை அவர்கள் செலுத்த வேண்டும் ” என்று அவர் கூறினார்.
- இது ஒரு தீவிரமான பிரச்சினை மற்றும் கவலைக்குரிய விஷயமாகும், 18வது லோக்சபா உறுப்பினர்களாக பதவியேற்ற போது பல எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
- சபாநாயகர் உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தை பின்பற்றுமாறு வலியுறுத்தினார்.
மாணவர்களுக்கான குறிப்பு:
1. UPSC Civil Service GS-3 தாள் மற்றும் கட்டுரை எழுதுவதற்கு உதவும்.
2. UPSC Civil Service Prelims மற்றும் TNPSC Group2 மற்றும் Group1 Prelimsக்கு உதவும்.
3. அரசியல் சம்பந்தமான தாள்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
*இந்த செய்தித் தொகுப்பு UPSC, TNPSC Group 1, 2 போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக.
-வர்ஷா செல்வச்சந்திரன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிரேட் நிக்கோபார் திட்டத்திற்கு அனுமதி!