கிச்சன் கீர்த்தனா: நண்டு மசால்

Published On:

| By Selvam

Crab Masala Recipe in Tamil

‘நாம வாழுறதே சாப்பிடறதுக்குத்தான்’ எனச் சொல்லும் உணவுப் பிரியர்கள் பலருக்கும் பிடித்த அசைவ உணவில் நிச்சயம் நண்டு இடம்பெறும். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்றது இந்த நண்டு மசால்.

என்ன தேவை?

நண்டு – ஒரு கிலோ
கடலை எண்ணெய் – 100 மில்லி
சோம்பு – 2 கிராம்
பட்டை – 2 கிராம்
கிராம்பு – ஒரு கிராம்
அன்னாசிப்பூ – 2 கிராம்
ஏலக்காய் – ஒரு கிராம்
பிரிஞ்சி இலை – ஒரு கிராம்
வெந்தயம் – 3 கிராம்
சின்ன வெங்காயம் – கால் கிலோ
பச்சை மிளகாய் – 50 கிராம்
கறிவேப்பிலை – 2 கிராம்
பூண்டு விழுது – 40 கிராம்
இஞ்சி விழுது – 20 கிராம்
மஞ்சள்தூள் – 3 கிராம்
தக்காளி – 100 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 25 கிராம்
மிளகாய்த்தூள் – 60 கிராம்
எலுமிச்சைச் சாறு – ஒரு பழம்
மிளகு மற்றும் சீரகத்தூள் – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேங்காய் மசாலா – 100 கிராம்
தேங்காய் மசாலாவுக்கு:
தேங்காய் – அரை மூடி (துருவிக் கொள்ளவும்)
முந்திரி – 20 கிராம்
கசகசா – 10 கிராம் (இதை மிக்ஸியில் பேஸ்ட் போல அரைக்கவும் – இதுதான் தேங்காய் மசாலா)

நண்டு மசாலாவுக்கு…

சோம்பு – 4
ஏலக்காய் – ஒன்று
சீரகம் – 3 சிட்டிகை
மிளகு – 5 கிராம்
பட்டை – ஒரு துண்டு
(மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக அரைக்கவும்)

எப்படிச் செய்வது?

வாணலியில் கடலை எண்ணெய் சேர்த்து, சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரிஞ்சி இலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு மஞ்சள்தூள், இஞ்சி விழுது, பூண்டு விழுது, தக்காளி, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், நண்டு மசாலா சேர்த்து நன்கு வதக்கிய பின், தேங்காய் மசாலா சேர்க்கவும். கலவை சற்று வதங்கியவுடன் நன்கு சுத்தம் செய்த நண்டு சேர்த்து வதக்கவும்.

இதனுடன் எலுமிச்சைச் சாறு, மிளகு மற்றும் சீரகத்தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக விடவும். நண்டு வெந்ததும் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைத்து இறக்கிப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா : இறால் மசால்

கிச்சன் கீர்த்தனா : விரால் மீன் ரோஸ்ட்

மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம் : தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!

பரம்பொருளைத் தவிர வேறு சில பொருள்: அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share