தவெக அரசின் கொள்கை இடதுசாரி பாதையா? தெளிவு படுத்துங்கள் விஜய்! – சிபிஐ

Published On:

| By Pandeeswari Gurusamy

மிழக முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் திட்டவட்டமான கொள்கையை தெளிவு படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இதுகுறித்து சிபிஐ எம்பி சுப்பராயன் தனது முகநூல் பதிவில், “தவெக அரசு இதுவரை, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை ஆக்கபூர்வமாக எதிர்கொள்வதிற்குரிய, தனது திட்டவட்டமான கொள்கையை அறிவிக்கவில்லை!
தனதுகொள்கைப் பிரகடனமாக அமைந்திருக்க வேண்டிய ஆளுநர் உரை அவ்வாறு அமையவில்லை!

ADVERTISEMENT

பட்ஜெட்,தளுக்கு, மினுக்கு நிறைந்த தனியார்மயப்பிரகடனமாகவே அமைந்துவிட்டது!

1991-ல் காங்கிரஸ் அரசால் அமலாக்கப்பட்டு, பாஜக- ஆர்எஸ் எஸ் அரசால் தீவிரமாக அமலாக்கப்பட்டு வருகிற, புதிய பொருளாதாரக் கொள்கை பற்றிய தவெக வின் கொள்கை நிலை என்ன?

ADVERTISEMENT

தவெகவின் அரசியல், பொருளாதாரக் கொள்கை வழி எது?

நாட்டை நல்வழிப்படுத்தும் கொள்கை கொண்ட இடதுசாரிகளின் பாதையா? நாட்டை நாசகார பாதையில் இழுத்துச் செல்லும்வலதுசாரிகளின் பாதையா? தெளிவு படுத்துங்கள் விஜய்!” என கேள்வி எழுப்பி உள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share