ஆந்திராவில் கொரோனா உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவது ஒமிக்ரான் வைரஸின் தொடர்ச்சியான சிக்காடா (Cicada) என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12 ஆகவும் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் உயிரிழந்தவர்கள் அனைவரும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் போன்ற இணை நோய்களைக் கொண்டிருந்தனர்.
தற்போதைய நிலையில் பரவல் இல்லாத கொரோனா பாதிப்பு நிலவரம்
- கேரளா 115
- கர்நாடகா 64
- மகாராஷ்டிரா 43
- தமிழ்நாடு 39
- அந்தமான் 18
- டெல்லி 18
- ராஜஸ்தான் 12
உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, இந்தியாவின் கொரோனா தொற்று உறுதித்தன்மை விகிதம் 5.3 சதவீதமாக உள்ளது.
தற்போதைய பாதிப்புக்கு காரணமான Omicron BA.3.2 வைரஸை விஞ்ஞானிகள் ‘சிக்காடா’ (Cicada) என்று அழைக்கின்றனர். இது 2022-ல் அமைதியாக இருந்து, 2024-ல் திடீரென அச்சத்தை ஏற்படுத்திய ஒமிக்ரான் வரிசையில் உருவானது. இருப்பினும் இது அச்சமூட்டும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.
‘சிக்காடா’ பாதிப்பு 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை தாண்டிச் செல்லும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது.
இதேபோல், ‘நிம்பஸ்’ (Nimbus) எனப்படும் NB.1.8.1 வைரஸும் கண்காணிப்பில் உள்ளது; இது தடுப்பூசி செலுத்தியவர்களையும் பாதிக்கக்கூடும் என்று WHO எச்சரிக்கிறது.
