சட்டசபை, மக்களவை தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் கட்சிப் பொதுக்குழுவை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடனே கூட்டணி வேண்டும் என்று அதிருப்தி அணியின் தலைவர்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் வலியுறுத்தி உள்ளனர்.
சென்னையில் இன்று மே 12-ந் தேதி செய்தியாளர்களிடம் சிவி சண்முகம் கூறியதாவது: சட்டமன்றத்தினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டமன்ற குழுவினுடைய தலைவராக எங்களுடைய கட்சியினுடைய தலைமை நிலைய செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
சட்டமன்ற கொறடாவாக டாக்டர் சி. விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். துணைத் தலைவராக சட்டமன்ற உறுப்பினர் ஹரி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
|
முறைப்படி தற்காலிக சபாநாயகரிடம் நேற்று நாங்கள் கடிதம் கொடுத்திருக்கிறோம். இது எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டமன்ற உறுப்பினருடைய பெரும்பான்மை முடிவெடுத்த முடிவு. அதை அதுமட்டுமல்ல இனி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் – நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல தொடர்ந்து பல்வேறு தேர்தல்களை நாங்கள் தோல்வியைச் சந்தித்து வருகிறோம்.
இதுல யார் மேலேயும் தனிப்பட்ட குற்றச்சாட்டு இல்லை. இந்த தோல்வியை நாங்கள் எல்லோருமாக நாங்கள் பொறுப்பாகத்தான் ஏற்றுக் கொள்கிறோம். அவர் குறை இவர் குறை என்று சொல்லவில்லை. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அனைவரும் சேர்ந்து இந்தத் தோல்வியை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். இப்போது எங்களுடைய கடமை எங்களுடைய கவலை எல்லாம் இந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், அம்மா அவர்களால் கட்டிக்காப்பாற்றப்பட்ட இந்த இயக்கம் காப்பாற்றப்பட வேண்டும், புத்துயிர் கொடுக்கப்பட வேண்டும், இதை நம்பியிருக்கிற கோடிக்கணக்கான தொண்டர்களை காப்பாற்றப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்திலே ஏன் தோற்றோம்? எதற்காக தோற்றோம்? என்ன காரணம்? என்பதை ஆராய வேண்டும், கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.
நல்ல முடிவை எடுக்க வேண்டும், கட்சியினுடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கலந்து எல்லோரையும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கழகத்தினுடைய பொதுச்செயலாளர் எடப்பாடியை, நாங்கள் கழகப் பொதுக்குழுவை விரைந்து கூட்டுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம் கொடுத்திருக்கிறோம். பொதுக்குழுவை கூட்டுங்கள். பொதுக்குழுவை நாம் ஆரோக்கியமாக விவாதிக்கலாம். என்ன நடந்தது? எங்க தவறு நடந்தது? ஏன் இது நடக்கிறது? தொடர்ச்சியாக இந்த நிலைமை என்ன காரணம்? முழுமையாக நாம் ஆராயப்பட வேண்டும். முழுமையாக இந்தக் கட்சியை புதுப்பிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். நம்புகிறோம் விரைந்து பொதுச்செயலாளர் அவர்கள் பொதுக்குழுவைக் கூட்டுவார் என்று நம்புகிறோம். கூட்ட வேண்டும் கூட்டுவார். அப்போது அந்தப் பொதுக்குழுவிலே நாங்கள் எல்லாரும் கலந்து எல்லோரும் ஒற்றுமையாக கலந்து கலந்தாலோசித்து இந்தக் கட்சியினுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய எதிர்காலத்தை மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமைவதற்கு நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் செயல்படுவோம் செயல்படுவோம். இவ்வாறு சிவி சண்முகம் கூறினார்.
எஸ்பி வேலுமணி கூறியதாவது: எங்களது அருமை நண்பர் சி.வி. சண்முகம் தெளிவாகச் சொல்லிட்டாரு. எங்களுக்கு அதிமுகவை உடைக்கும் நோக்கமே கிடையாது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்த கட்சி, இப்போ நானோ சி.வி. சண்முகமோ தங்கமணி விஜயபாஸ்கர் நாங்க எல்லாம் ஆரம்பத்துல கட்சி ஆரம்பித்த போது எங்களுடைய தந்தைமார் இந்த கட்சிக்காக உழைத்தவங்க. ஆகவே அந்த நோக்கம் எல்லாம் கிடையாது. தொடர் தோல்வி. 21-லயும் நம்ம வெற்றி பெற்றிருக்க வேண்டியது. 24-லும் (இருபத்தி நான்கிலும்) நம்ம பெரிய வெற்றி பெற்றிருக்க வேண்டியது. அதெல்லாம் கையிலிருந்து போயிருச்சு. இதே போல இந்தச் சூழ்நிலையிலும் நம்ம ஆட்சி அமைத்திருக்க வேண்டிய ஒரு சூழல் இருந்தது. அண்ணா திமுக ஆட்சி வந்திருக்கணும் அம்மாவுடைய ஆட்சி. தொடர் தோல்வி காரணமாக சில கேள்விகள் எழுப்பினோம். அண்ணன் இப்ப எல்லாம் விளக்கமா சொல்லிட்டாங்க. ஆகவே அண்ணா திமுக எப்பொழுதும் உடையாது, அதுக்கு நாங்க காரணமாக இருக்க மாட்டோம். அண்ணன் சொன்ன மாதிரி ஒரு ஆரோக்கியமா பொதுக்குழு கூட்டி பொதுச்செயலாளர் கண்டிப்பா ஒரு ஆரோக்கியமா அது முடிவெடுத்து மீண்டும் அம்மாவுடைய ஆட்சியை அமைப்பதற்கு அண்ணா திமுக கண்டிப்பா ஒரு மாற்றத்தை நோக்கிச் செல்லும். கட்சி கட்டுக்கோப்பா போகணும், ஆகவே அதுக்கு அவரும் வந்து இறங்கி வந்து பண்ணனும். இவ்வாறு எஸ்பி வேலுமணி கூறினார்.
