விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்சினைகளை வலியுறுத்தி பாஜகவின் மோடி அரசுக்கு எதிராக நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது, போலீசாரின் பேரிகார்டுகளை பிரியங்கா காந்தி தாண்டி குதித்தது என பல புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலக பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது பிரியங்கா காந்தி போலீசாரால் வைக்கப்பட்ட பேரிகார்டுகளை தாண்டி குதிக்கும் காட்சி.
போலீசாரால் கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் லைன்ஸ் கிங்ஸ்வே முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் போராட்டத்தின் போது உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஸ் ராவத் போலீசாரால் குண்டுகட்டாக தூக்கிச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்த போலீசார்.

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய எம்.பி.க்கள்.
மத்திய அரசுக்கு எதிராக குரல் : ராகுலைத் தொடர்ந்து பிரியங்காவும் கைது!
