பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் வீடியோவை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் ஊடகத்தின் நிறுவனர் பெலிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ளனர்.
இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, யூடியூபர் சவுக்கு சங்கர் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களை ஆராய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் காண்டீபன் சென்னை காவல்துறை இயக்குனர் அலுவலகத்தில் இன்று (மே 21) புகாரளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள புகார் மனுவில்,
“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர்பிரசாத்ரெட்டி, சவுக்கு சங்கர், பெலிக்ஸ் ஜெரால்ட், சவுக்கு மீடியாவில் பணியாற்றிய பிற ஊழியர்கள் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் செய்வது தேச விரோத செயலாகும்.
கடந்த ஒரு வருட செல்போன் அழைப்புகளை ஆராய்ந்தாலே இவர்களுக்கிடையே உள்ள நெருக்கமான தொடர்புகள் தெரியவரும். இவர்களை இயக்குவதே அண்ணாமலை தான்.
ஆகவே, இவ்விஷயத்தில் காவல் துறை இயக்குநர் பாரபட்சமின்றி தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
எலக்ட்ரிக் வாகனங்களால் இவ்வளவு நன்மைகளா?
குழந்தையின் பாலினத்தை அறிவித்த இர்ஃபான்: சுகாதாரத்துறை விளக்கம்!