தாராபுரத்தில் இன்று (செப்டம்பர் 30) முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது கோவை வருகையை முன்னிட்டு மாநகரில் இன்று ஒருநாள் முழுவதும் போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கை:
30.09.2026ஆம் தேதியன்று, தமிழக முதல்வர் விஜய் கோவை மாநகருக்கு வருகை புரிவதால், கீழ்க்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
I. INCOMING VEHICLE DIVERSION
கோவை மாநகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள்
சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் நீலம்பூரிலிருந்து, சின்னியம்பாளையம், ஏர்போர்ட் வழியாக மாநகருக்குள் வருவது தடை செய்யப்படுகிறது. மாறாக இந்த வாகனங்கள் நீலம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.
கோவை மாநகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள்
நீலம்பூர் பகுதியில் இருந்து நகருக்குள் வரும் இலகுரக வாகனங்கள் நீலம்பூரில் இருந்து L&T பைபாஸ் வழியாக சிந்தாமணிபுதூர், ஒண்டிப்புதூர், சிங்காநல்லூர் வழியாக நகருக்குள் வரலாம்.

II. OUTGOING VEHICLES DIVERSION
கோவை மாநகருக்குள் இருந்து அவிநாசி சாலை வழியாக வெளியே செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் U-Turn செய்து புலியகுளம், இராமநாதபுரம், சிங்காநல்லூர் வழியாக L&T பைபாஸ் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
கோவை மாநகரில் இருந்து அவிநாசி சாலை வழியாக மாநகருக்கு வெளியே செல்லும் இலகுரக வாகனங்கள்,
a) அவிநாசி சாலை, V.K.ரோடு வழியாக வரும் வாகனங்கள், மசக்காளிபாளையம் சாலை வழியாக சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
b) அவிநாசி சாலை, ஹோப்ஸ் வழியாக வரக்கூடிய வாகனங்கள், டைடல் பார்க் சந்திப்பில் U-Turn செய்து காமராஜர் சாலை, சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
c) காளப்பட்டி சந்திப்பில் இருந்து சித்ரா அவிநாசி சாலை வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் காளப்பட்டி சந்திப்பில் இருந்து தென்னம்பாளையம் வழியாக அவிநாசி சாலைக்கு செல்லலாம்.
d) கோல்டுவின்ஸ் சாலையில் இருந்து அவிநாசி சாலைக்கு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் ஹவுசிங்யூனிட் ரோடு மாருதி பேக்கரி ஜங்சனில் இருந்து வலது புறம் திரும்பி விளாங்குறிச்சி சாலை வழியாக காளப்பட்டி சந்திப்பிற்கு செல்லலாம்.
III. AIRPORT PASSENGERS – INSTRUCTIONS
a) 30.09.2026ம் தேதியன்று தமிழக முதல்வர் விஜய்யின் வருகையையொட்டி விமான நிலையத்திற்கு பயணிகளை இறக்கி விடவும், ஏற்றிச் செல்லவும் வரும் வாகனங்கள் மற்றும் கால் டாக்சிகள், தங்களது பயண நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து சேருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
b) 30.09.2026 ஆம் தேதியன்று கால் டாக்சிகள் மற்றும் மற்ற வாகனங்கள் விமான நிலையத்திற்குள் Parking செய்ய அனுமதியில்லை.
IV. HEAVY VEHICLES – நகருக்குள் நுழையத் தடை
30.09.2026 ஆம் தேதியன்று காலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர முற்றிலும் தடை செய்யப்படுகிறது. இவ்வாறு கோவை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
