கோவை ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. அக்டோபர் 9 முதல் ரயில் சேவைகளில் மாற்றம் – முழு விவரம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

கோவை ரயில் நிலையப் பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், வரும் அக்டோபர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இயங்கும் சில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு ரயில் (66611): அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் காலை 8.20 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், கோவை சந்திப்பு வரை மட்டுமே இயங்கும். கோவை – போத்தனூர் இடையே செல்லாது.

ADVERTISEMENT

சொர்ணூர் – கோவை பயணிகள் ரயில் (56604): அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் காலை 8.20 மணிக்கு சொர்ணூரில் இருந்து புறப்படும் இந்த ரயில், போத்தனூர் சந்திப்புடன் நிறுத்தப்படும். போத்தனூர் – கோவை இடையே இயங்காது.

மேட்டுப்பாளையம் – போத்தனூர் மெமு ரயில் (66615): அக்டோபர் 11-ஆம் தேதி மதியம் 1.05 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில், கோவை வடக்கு நிலையத்துடன் நிறுத்தப்படும். கோவை வடக்கு – போத்தனூர் இடையே செல்லாது.

ADVERTISEMENT

போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612): அக்டோபர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, கோவை சந்திப்பில் இருந்து காலை 9.55 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும்.

கோவை – சொர்ணூர் பயணிகள் ரயில் (56603): அக்டோபர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கோவை சந்திப்பில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, போத்தனூர் சந்திப்பில் இருந்து மாலை 4.38 மணிக்கு புறப்பட்டு சொர்ணூர் செல்லும்.

ADVERTISEMENT

போத்தனூர் – மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66616): அக்டோபர் 11-ஆம் தேதி போத்தனூரில் இருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படுவதற்குப் பதிலாக, கோவை வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.52 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும்.

எனவே பயணிகள் அனைவரும் இந்த மாற்றங்களை அறிந்துகொண்டு தங்களுடைய பயணத்தைத் திட்டமிடுமாறு தென்னக ரயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share