உத்தராகண்ட்: இமயமலை பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்… டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் அதிர்ந்தன!

Published On:

| By Mathi

Uttarakhand Earthquake

உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதி மாவட்டமான சமோலியில் இன்று (அக்டோபர் 6) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகள் டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டன.

இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின் (NCS) தகவலின்படி, இன்று இரவு 10.23 மணியளவில் உத்தராகண்ட் மாநிலம் சமோலி பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 13 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

ADVERTISEMENT

அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS, உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.1 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

இமயமலையில் உள்ள சமோலி மாவட்டத்தில்தான் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் அமைந்துள்ளது. இமயமலை அடிவார நகரமான ரிஷிகேஷில் இருந்து சுமார் 200 கி.மீ. தொலைவில் உள்ளது சமோலி.

ADVERTISEMENT

உத்தராகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டது.

முன்னதாக, இன்று அதிகாலையில் அஸ்ஸாம் மாநிலத்தின் நாகோன் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share