கோவை ரயில் பயணிகளின் கவனத்திற்கு: அக்.7, 8-ல் சில ரயில்களின் பாதையில் மாற்றம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Changes in trains passing through Coimbatore

கோவை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், அக்டோபர் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் கோவை வழியே செல்லும் சில ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ” மேட்டுப்பாளையம் – கோவை MEMU ரயில் (66613): மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10:55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கோவை வடக்கு ரயில் நிலையம் வரை மட்டுமே இயங்கும். கோவை வடக்கு – கோவை சந்திப்பு இடையே இயங்காது.

கோவை – மேட்டுப்பாளையம் MEMU ரயில் (66614): கோவை சந்திப்பில் இருந்து காலை 11:50 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கோவை சந்திப்பிற்கு பதிலாக, கோவை வடக்கு ரயில் நிலையத்திலிருந்து காலை 11:57 மணிக்கு மேட்டுப்பாளையம் நோக்கிப் புறப்படும்.

ADVERTISEMENT

கோவை சந்திப்பிற்கு வராமல் மாற்றுப்பாதையில் செல்லும் ரயில்கள்:

அதேபோல் கோவை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வராமல், இருகூர் – போத்தனூர் வழியாக திருப்பி விடப்படும்.

ADVERTISEMENT

    சென்னை எழும்பூர் – மங்களூரு எக்ஸ்பிரஸ் (16159): அக்டோபர் 7 அன்று பீளமேடு, கோவை வடக்கு, கோவை சந்திப்பில் நிற்காது. அதற்குப் பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் (காலை 09:45 / 09:50) நின்று செல்லும்.

    தன்பாத் – போத்தனூர் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் (16620): அக்டோபர் 7 அன்று கோவை சந்திப்பிற்கு வராது.

    ADVERTISEMENT

    திப்ரூகர் – கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504): அக்டோபர் 7 அன்று கோவை சந்திப்பிற்கு வராது. அதற்குப் பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் (காலை 10:47 / 10:50) நின்று செல்லும்.

    ஆலப்புழை – தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352): அக்டோபர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கோவை சந்திப்பிற்கு வராது. அதற்குப் பதிலாக போத்தனூர் ரயில் நிலையத்தில் (மதியம் 12:15 / 12:20) நின்று செல்லும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Photo of author
    Pandeeswari Gurusamy

    ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
    Join Our Channel
    Share