பயணிகள் கனிவான கவனத்துக்கு.. காந்தி ஜெயந்தி 3 நாள் தொடர் விடுமுறை: கோவை, தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்!

Published On:

| By Mathi

Spl Trains

காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கோவை மற்றும் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை. அதைத் தொடர்ந்து அக்டோபர் 3- ஆம் தேதி சனிக்கிழமை, அக்டோபர் 4-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 3 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது.

ADVERTISEMENT

இந்த விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை – போத்தனூர்

சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கு சிறப்பு ரயில் (06023) அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது.

ADVERTISEMENT

இந்த ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக போத்தனூர் செல்கிறது.

மறுமார்க்கத்தில் போத்தனூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில் (06024) அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது.

ADVERTISEMENT

தாம்பரம் – மானாமதுரை மெமு ரயில்

தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் (06159) அக்டோபர் 1-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் அதிகாலை 1.20 மணிக்கு மானாமதுரை சென்றடைகிறது.

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்படுகிறது.

திண்டுக்கல்லுக்கு இரவு 10.30 மணிக்கு வந்து, 10.35 மணிக்கு புறப்படும். மதுரைக்கு இரவு 11.45 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் மானாமதுரையில் இருந்து தாம்பரத்துக்கு முன்பதிவில்லா மெமு சிறப்பு ரயில் (06160) அக்டோபர் 4-ஆம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு, அன்றிரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

தாம்பரம் – தென்காசி

தாம்பரத்தில் இருந்து தென்காசிக்கு சிறப்பு ரயில் (06123) அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் மதியம் 12.15 மணிக்கு தென்காசி சென்றடைகிறது.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர் வழியாக இயக்கப்படுகிறது.

திண்டுக்கல்லுக்கு மறுநாள் காலை 7.20 மணிக்கு வந்து 7.25 மணிக்கு புறப்படும். மதுரைக்கு காலை 8.30 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் (06124) அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

எர்ணாகுளம் – சென்னை எழும்பூர்

எர்ணாகுளத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு ரயில் (06056) அக்டோபர் 4-ஆம் தேதி இரவு 11.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 12.30 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடைகிறது.

இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் வழியாக இயக்கப்படுகிறது.

மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் (06055) அக்டோபர் 5-ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு எர்ணாகுளம் சென்றடைகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share