திமுகவுக்கு எதிரான சர்க்காரியா ஆணையம், அமலாக்கத்துறை அறிக்கைகளை ‘ஆவேசமாக’ வாசித்த விஜய்

Published On:

| By Mathi

சர்க்காரியா ஆணையம் குறித்து விஜய் ஆவேசம்

திமுக ஆட்சிக்கால முறைகேடுகள் தொடர்பாக சர்க்காரியா ஆணையம், அமலாக்கத்துறை அறிக்கைகளை சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் மிகவும் ஆவேசமாக வாசித்தார்.

சட்டசபையில் இன்று (செப்டம்பர் 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஜோசப் விஜய் அளித்த பதில்: மக்கள் பணத்திலிருந்து ஒரு பைசாகூட தொட மாட்டோம்; தொட்டவர்களையும் விட மாட்டோம். லாஸ்ட் வீக் பேசும்போது, “என் டேபிள்ல ஒரு மூணு டிபார்ட்மென்ட் ஃபைல் இருக்கு. அதை எப்போ ஓபன் பண்ணணுமோ அப்போ ஓபன் பண்ணுவேன்”னு சொன்னேன். உடனே எதிர்க்கட்சியிலிருந்து, “இப்பவே ஓபன் பண்ணுங்களேன்”னு சவால் எல்லாம் விட்டாங்க.

ADVERTISEMENT

இப்போ அதை ஓபன் பண்றதுக்கு முன்னாடி ஒரு சின்ன சாம்பிள் ஒண்ணு பார்ப்போமா?

போன திமுக கவர்மென்ட்டுக்கு அமலாக்கத்துறை அனுப்புன டாக்குமென்ட். நான் மறுபடியியும் சொல்றேன். நான் கோர்ட் கேஸ், விசாரணைக்குள்ள எல்லாம் போகல. அதுக்குள்ள எல்லாம் நான் போகல.

ADVERTISEMENT

அந்த டாக்குமென்ட்ல இருக்கிற சில தகவல்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லணும்ல? இதை முழுசா படிச்சா ரெண்டு, மூணு நாள் ஆகும். ஹைலைட்ஸ் மட்டும் படிக்கிறேன்.

இந்த சர்க்காரியா கமிஷன், சர்க்காரியா கமிஷன்னு ஒண்ணு இருக்கு. அதுல என்ன இருக்குன்னு கொஞ்சம் பார்க்கலாம்.

ADVERTISEMENT

1970-களில் திமுக ஆட்சி இருந்தப்போ, சத்யநாராயணா பிரதர்ஸ்னு ஒரு கம்பெனிக்கு வீராணம் திட்டத்துக்கான குழாய்கள் தயாரிக்கிற டெண்டர் கொடுத்த விவகாரம் பற்றி சர்க்காரியா விசாரணைக் கமிஷன் இறுதி அறிக்கை தமிழ் டிரான்ஸ்லேஷன் தொகுதி ஒன்றில், ‘வீராணம் திட்டம்’னு சொல்லி ஒரு தனி சாப்டரே இருக்கு.

அதுவும் 80 பக்கத்துக்கு இருக்கு. அதாவது 71-ஆம் பக்கத்திலிருந்து 150-ஆவது பக்கம் வரைக்கும் அந்த சாப்டர் இருக்கு.

அதுல, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, டெண்டர் வேணும்னா 2½ சதவிகிதம் கமிஷன் தரணும்னு கலைஞரின் மருமகன் மாறன் கேட்டாராம்.

டெண்டர் 16 கோடிக்கும் அதிகம்னு எஸ்டிமேட்டாம். 16 கோடிக்கு 2½ சதவிகிதம்னா 40 லட்சம் ரூபாய் கமிஷனா வரும்னு கணக்காம். இந்தக் கணக்கும் விசாரணைக் கமிஷன் அறிக்கையில்தான் இருக்கு.

2001-ல் இதே அவையில் முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா மேடமும், முன்னாள் அமைச்சர் பொன்னையன் அவர்களும் இதே சர்க்காரியா விசாரணைக் கமிஷன் அறிக்கையைப் பற்றி பேசியிருக்காங்க.

அப்பதான் இந்த சத்யநாராயணா பேரும் அடிபட்டுச்சு; அவருடைய மருமகன் புருஷோத்தமன் பேரும் அடிபட்டுச்சு.

50 வருஷத்துக்கு முன்னாடி நடந்த ஒரு விஷயத்தை 25 வருஷத்துக்கு முன்னாடி இதே சபையில் பேசியிருக்காங்களேன்னு சொல்லி கொஞ்சம் தோண்டி எடுத்தோம். அப்பதான் எல்லா கூத்தும் வெளியே வர ஆரம்பிச்சது.

அப்படிப் பார்த்தா அந்த அறிக்கை வந்து பொன்விழா ஆண்டே வந்திருக்கு. பவளவிழா… அது வேணாம்.

பவளவிழா கட்சியோட பொன்விழா கண்ட சாதனைதான் இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை போல.

அப்புறம் அந்த அறிக்கையில் புருஷோத்தமன்னு ஒருத்தர் சொல்றாரு. அவர் சொன்னபடி பார்த்தா, 1970-லிருந்து 1974 வரைக்கும் ஏழு இன்ஸ்டால்மென்ட்ல மொத்தம் 29 லட்சம் ரூபாய் கையூட்டு கொடுக்கப்பட்டிருக்குன்னு சொல்லியிருக்கு.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கையூட்டு… கையூட்டுன்னா லஞ்சம்.

லோனுக்கு EMI கட்டுற மாதிரி இன்ஸ்டால்மென்ட்ல வாங்கியிருக்காங்க.

இந்த 29 லட்சம் மட்டும் இல்ல. இந்த முறைகேடு கட்டிடம்னு சொல்லி அதை கட்டுறதுக்காக எல்லாம் கேஷா கொடுத்திருக்காங்க; காசா கொடுத்திருக்காங்க; பொருளாகவும் வாங்கிக் கொடுத்திருக்காங்க.

இதைப் பாருங்க. எனக்கு கலைஞர் அவர்கள் மேல பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு. தவறாக அவர் பேரை மென்ஷன் பண்ணதுக்கு சாரி கேட்டவங்கதான். அவர் மேல பெரிய மதிப்பும் மரியாதையும் உண்டு.

இதெல்லாம் எங்களுடைய குற்றச்சாட்டு இல்லை. அந்த அறிக்கையில் இருக்கிற குற்றச்சாட்டு. அமலாக்கத்துறை அனுப்புன டாக்குமென்ட்ல இருக்கிற குற்றச்சாட்டு.

சரி, இதுல என்னதான் நடந்திருக்குன்னு படிச்சுட்டே போனா, அந்த அறிக்கையில் எப்படி போட்டிருக்கு தெரியுமா?

சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் தர்றதுக்காக அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் தன்னுடைய முதலமைச்சர் பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்.

அதுவும், “Abusing his official position as the Chief Minister of Tamil Nadu” என்று சொல்லியிருக்கு.

கவர்மென்ட் ஏத்துக்கிற மாதிரி டெண்டரை குறைச்சுப் போடச் சொல்லி, அதுக்காக தலைமைப் பொறியாளராக இருந்த உசேனை கட்டாயப்படுத்தினார் என்றும் நிரூபிக்கப்பட்டிருக்குன்னு சொல்லியிருக்கு.

Note this point, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.

“கட்டாயப்படுத்தினார் என்று நிரூபிக்கப்பட்டிருக்கு.”

சில குற்றச்சாட்டுகளைப் பற்றி சொல்றப்போ,

“The following charges have been established by cogent, convincing and reliable evidence — oral, documentary and circumstantial”

அப்படின்னு இருக்கு.

இதைக்கூட இப்பதான் பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை நான் ஏன் சொல்றேன் அப்படின்னா, “எங்களுடைய அரசியல் பாரம்பரியம் பற்றி தெரியுமா? எங்களுடைய அரசியல் அனுபவம் பற்றி தெரியுமா? எங்களுடைய அரசியல் சீனியாரிட்டி பற்றி தெரியுமா?” அப்படின்னு வீர வசனம் எல்லாம் பேசுவாங்களே!

அவங்களோட சீனியாரிட்டியைப் பற்றி, அவங்களோட அனுபவத்தைப் பற்றி, அவங்களோட அந்த அரசியல் பாரம்பரியத்தைப் பற்றி மக்களுக்கு நாம் எடுத்துச் சொல்லணும்ல?

இதெல்லாம் சொன்னா ஓடிருவாங்க. அதுக்கு நாம் பொறுப்பில்லை.

இப்பவும் சொல்றேன். நீங்க ஆதாரம் கேட்டீங்கன்னா பார்லிமென்ட் வரைக்கும் எல்லாம் போகத் தேவையில்லை. இங்க நம்ம சட்டசபைக்குள்ள லைப்ரரி இருக்கு. அங்க போய்த் தேடிப் பாருங்க.

சர்க்காரியா கமிஷன் எழுதின புக்கு இன்னும் இருக்கு.

“மிஸ்டர் கிளீன்… மிஸ்டர் கிளீன்”னு சொல்லிக்கிறாங்களே! அப்பவே அப்படின்னா, இப்போ யோசிச்சுப் பாருங்க… மிஸ்டர் கிளீனா?

திமுகவுக்கு எப்பவும் ஒரு பழக்கம் ஒண்ணு உண்டு. ஆதாரத்தைப் பக்கத்துலேயே வச்சுக்கிட்டு, மத்தவங்ககிட்ட போய்த் தேடிட்டு இருப்பாங்க.

அப்படித்தான் நான் ‘பார்ட்டி ஃபண்ட்’னு சொன்னதும் ஆதாரம் கேட்டாங்க.

இப்பதான் சொல்றேன். ஆதாரம் பக்கத்துலேயேதான் இருக்கு.

இந்த அமலாக்கத்துறைக்கு வருவோம்.

அமலாக்கத்துறை சுமார் 100 பக்கத்துல ஒரு அறிக்கை கொடுத்துச்சு. பார்ட்டி ஃபண்ட் வாங்குறதுக்கான ஆதாரங்கள் இருக்குன்னு ஒரு டாக்குமென்ட்டை திமுக ஆட்சியில் இருந்தப்பவே கொடுத்துச்சு.

அதுலயும் பார்ட்டி ஃபண்டைப் பற்றி சொல்லியிருக்கு. அதுல இன்னும் அவங்க பண்ண ஊழல் பற்றியெல்லாம் சொல்லியிருக்கு.

இந்தப் பிரச்சினை சம்பந்தமா நாம் கோர்ட் விஷயத்துல தலையிடல. அதைப் பற்றி எந்த கமென்ட்டும் நாங்க சொல்லல.

இவங்களுக்கு பார்ட்டி ஃபண்ட் பற்றின ஆதாரம்தானே வேணும்?

அதனாலதான் சொல்றது. “அது என்ன இந்த விஜய் சொல்றது?” அமலாக்கத்துறையே சொல்லியிருக்கு. அதைக் கொஞ்சம் கேட்போம்.

7.5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதம் வரைக்கும் பார்ட்டி ஃபண்ட் வாங்குனதா அந்த டாக்குமென்ட்ல ED சொல்லியிருக்கு.

அதாவது, கான்ட்ராக்ட் ரேட்ல இவ்வளவு பர்சன்டேஜ் தரணும்னு சொல்லி வாங்கியிருக்காங்க. அதையும் ‘பார்ட்டி ஃபண்ட்’ங்கிற பேர்ல லஞ்சமா வாங்கியிருக்காங்கன்னு சொல்லியிருக்கு.

“The bribes were collected from the contractors…”

அது யாரு? MAWS Department — Municipal Administration and Water Supply Department — Government works, “in the form of party fund.”

Note this point, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே — “in the form of party fund.”

“The bribes in the form of party fund is collected for the benefit of the party in power and which is running the Tamil Nadu Government.”

“The party in power and which is running the Tamil Nadu Government.”

எந்த கவர்மென்ட் அப்போ ரூல் பண்ணிட்டு இருந்தது?

திமுக.

இப்போ அடுத்ததுதான் கிளைமாக்ஸ். இதைக் கேளுங்க.

“The direct beneficiary of the party fund is Sri M.K. Stalin, Chief Minister of Government of Tamil Nadu and his son Sri Udhayanidhi, Deputy Chief Minister and Kavi Prasad, D. Ramesh, Prabhu and many other unknown persons. Government officers collect bribes in the form of party fund.”

இந்த ஒரு டிபார்ட்மென்ட் மட்டும் இல்ல. அடுத்து ஒரு டிபார்ட்மென்ட்டும் இருக்கு.

அதுல யார் மந்திரியா இருந்தார்? முதல்ல… அப்புறமா யாரை மந்திரியா மாத்துனாங்க? அந்த டிபார்ட்மென்ட்டுக்குள்ள இருந்த… அதுக்குள்ள நம்ம போகத் தேவையில்லை. அது அவங்க பிரச்சினை.

இந்த அடுத்த டிபார்ட்மென்ட்டில் நடந்த முறைகேடுகளைப் பற்றி ED அவ்வளவு தகவல்களைச் சொல்லியிருக்கு.

அதாவது, அந்தத் துறைக்கு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தன் அமைச்சர் பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்.

“Abusing their official position…”

அப்புறம் இன்னும் இந்த ED சொல்லுது. அது என்ன தெரியுமா?

“Abusing their official position and with dishonest intention entered into criminal conspiracy during the year 2021 onwards.”

Dishonest intention!

What a great achievement! What a great achievement!

Dishonest intention!

அதுதான் திமுக.

போன ஆட்சியை இதுக்குப் பாராட்டாம இருக்கவும் முடியல!

போன ஆட்சியில் TASMAC-ஐ கையில் வச்சிருந்த அமைச்சர் இருக்காரே, அவரோட சேர்ந்து IAS ஆபீசர் உள்ளிட்ட அதிகாரிகள் சில பேரும் அந்த விஷயத்துல ஈடுபட்டிருக்காங்க.

அது இல்லாம சில individuals பேரும் அதுல mention ஆகியிருக்கு.

அதுல ரதீஷ்னு ஒருத்தர் பல ஆபீசர்களோட டிரான்ஸ்ஃபரை, குறிப்பா DRO level-ல ஆபீசர்களோட டிரான்ஸ்ஃபரை எல்லாம் decide பண்ணியிருக்காரு.

இவரைப் பற்றி சொல்றப்போ,

“A central figure operating as an unauthorized power broker.”

எவ்வளவு பெருமையா சொல்லியிருக்கு பாருங்க!

இந்த ரதீஷ் உத்தரவின்படிதான் அப்ப TASMAC MD-ஆ இருந்த IAS ஆபீசரே செயல்பட்டார்னு ED சொல்லியிருக்கு.

யார் இந்த ரதீஷ்?

இவர் யாருக்கு நெருக்கமானவர்?

நம்முடைய அரசு வந்ததுக்கு அப்புறம் இவரே துபாய்ல போய் ஒளிச்சுக்கிட்டாரு.

யாரோட instructions-ல இதெல்லாம் இத்தனை வருஷமா அவர் செஞ்சிட்டு இருந்தாரு?

பதில் சொல்வாங்களா?

கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

அப்புறம் செந்தில் பாலாஜியோட சகோதரர் அசோக் குமாரும் TASMAC transport tenders-ல தலையிட்டாருன்னு சொன்னதோடு, fraud and manipulation and illicit financial transactions-ல அவரைப் பற்றியும் ED சொல்லியிருக்கு.

அண்ணன், தம்பி ரெண்டு பேரைப் பற்றியும் சொல்லிட்டு, financial irregularities-ஐ ஒருங்கிணைத்தது அவங்கதான்னு சொல்லியிருக்கு.

அதுக்கு மேல,

“The said financial fraud scam which is happening for more than a decade had increased to multiple fold during the period of 2021 to 2025”

என்று சொல்லியிருக்கு.

திமுக எதை எப்போ செஞ்சாலும் குடும்பமா சேர்ந்துதான் செய்வாங்க போல!

இதைக் கேளுங்க. இதுதான் ஹைலைட்.

“It is also ascertained that political people around Coimbatore, Karur and other districts insisted and collected party fund from the bar owners and they are mentioned as…”

யாருக்காவது clue இருக்கா?

தம்பி, உனக்குத் தெரியுமா? என்னன்னு கூப்பிடுவாங்க?

They are mentioned as…

அதாவது திருப்பிப் படிக்கிறேன்.

“Political people around Coimbatore, Karur and other districts insisted and collected the party fund from the bar owners and they are mentioned as ‘Karur gang’.”

என்ன சூப்பரான ஒரு பேர் பாருங்க!

Karur gang!

அந்த gang-ஓட தலைவன் யாருன்னு நமக்கே இவ்வளவு ஆர்வமா இருக்கு. அப்ப மக்களுக்கு எப்படி இருக்கும்?

அப்புறம் customer-கிட்ட இருந்து excess amount collect பண்றதைப் பற்றி சொல்றப்போ,

“From rupees 10 to rupees 100 was illegally collected from the customer between 2021 to 2025 in an organized manner.”

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, please note this point — “in an organized manner.”

செய்யுற தப்பையே… illegal-ஆ செய்யுற விஷயத்தையே ஒழுங்கா, முறையா, கரெக்டா செஞ்சிருக்காங்க!

அறிவியல் ஊழல் கேள்விப்பட்டிருக்கீங்களா யாராவது?

இதான் அது!

திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளைப் பற்றி சொல்றப்போ, the choice of words, அவங்க என்ன use பண்றாங்க பாருங்க:

Malpractice, fraud, manipulation, misuse, abusing power, Karur gang, organized crime syndicate, dishonest intention, corrupt, corrupt and illegal manner.

இதெல்லாம் இப்போ சொன்னா என்ன சொல்லுவாங்க தெரியுமா?

“சுப்ரீம் கோர்ட்டுதான் பெயில் கொடுத்திருச்சு” அப்படின்னு சொல்லுவாங்க.

பெயிலை reject பண்ண ஹைகோர்ட்டும் சரி, பெயில் கொடுத்த சுப்ரீம் கோர்ட்டும் சரி, விசாரிக்கவே கூடாதுன்னு சொல்லலையே!

விசாரிக்கவே கூடாதுன்னு சொல்லலையே!

பாஸ்போர்ட்டை ஒப்படைக்கணும்னு ஏன் சுப்ரீம் கோர்ட் சொல்லுச்சு?

அதுக்கு என்ன அர்த்தம்?

எல்லாத்தையும் மக்கள் பார்த்துக்கிட்டு இருக்காங்க.

இப்போ இந்த ரெண்டு டிபார்ட்மென்ட் ஃபைலை ஓபன் பண்றதுக்கே இப்படி இருக்குன்னா, மத்த டிபார்ட்மென்ட்டெல்லாம் ஓபன் பண்ணா இன்னும் எத்தனை பூதம் கிளம்பி வருமோ தெரியல!

“ஆதாரம் வேணும்… ஆதாரம் வேணும்… ஆதாரம் வேணும்…”

போதுமா?

போதுமா ஆதாரம்?

ஆதாரம் போதுமா?

அதாவது இந்த உலகத்தில் ரெண்டு வகை ஒண்ணு இருக்கு.

தப்பு செஞ்சுட்டு தப்புல மாட்டிக்கிறவங்க ஒரு பக்கம்.

ரெண்டாவது, அந்தத் தப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம்னு எல்லாம் ரெடி பண்ணி வச்சிட்டு, மாட்டிக்காத மாதிரி தப்பு செய்றவங்க இன்னொரு பக்கம்.

நம்ம தோழர்கள் எல்லாம் ரெண்டாவது category!

அடுத்து இந்த திமுக மேடையில் பேசும்போது பெருமையா ஒண்ணு சொன்னாங்க:

“திமுக இருக்கிற இடத்துல தப்பே நடக்காதாம். தப்பு நடக்கிற இடத்துல திமுகவே இருக்காதாம்.”

அதை நான் கொஞ்சம் உல்டாவா சொல்றேன்.

திமுக இருக்கிற இடத்துலதான் தப்பே நடக்கும்.
தப்பு நடக்கிற இடத்துலதான் திமுகவே இருக்கும்.

நம்ம நண்பர்கள் ஏதாவது பேசும்போது கவனிச்சிருப்பீங்க. நானோ அல்லது நம்ம நண்பர்களோ பேசும்போது ‘ஊழல்’ அப்படின்னு சொல்லிட்டா போதும், எல்லாம் டப்புக்குன்னு எழுந்துருவாங்க.

“ஆதாரம்… ஆதாரம்… ஆதாரம்…”

ஆனா ஒண்ணு மட்டும் சொல்ல மாட்டாங்க. அதை கவனிச்சீங்களா?

“இதுவரைக்கும் நாங்க ஊழலே செஞ்சது இல்லை”னு சொல்ல மாட்டேன்றாங்க!

ஊழல் செய்றவங்கதான் ஆதாரம் கேட்பாங்க. ஊழலே செய்யாதவங்க அதைப் பற்றிக் கண்டுக்கவே மாட்டாங்க.

சரி, அதுக்குள்ள நம்ம ரொம்ப உள்ள போக விரும்பல.

திமுக நம்மைப் பற்றி என்னதான் அவதூறா பேசினாலும், நாம் அவங்க கீழ எல்லாம் இறங்கிப் பேசுற டைப் கிடையாது.

ஆனா ஒண்ணு செய்வோம்.

அவங்க செஞ்சதுக்குக் கீழ போய் நல்லா டீப்பா, டெப்த்தா தோண்டித் துருவி எல்லாத்தையும் மேல கொண்டு வந்து, மக்களை ஏமாற்றுகிற அந்தப் போலி பிம்பத்தையும் போலி பிராண்டையும் உடைப்போம்.

இதை எச்சரிக்கையாக எல்லாம் சொல்லல.

ரொம்ப டீசன்ட்டா, ரொம்ப அன்பா, ரொம்ப க்யூட்டா, ரொம்ப லவபிளா சொல்லிக்கிறோம்.

1967… 1977… 1982… 2026…
அண்ணா… எம்.ஜி.ஆர்… என்.டி.ஆர்… விஜய்.

இறைவனும், இயற்கையும், மக்களும் நம்ம பக்கம். நம்ம பக்கம்தான் எப்பவுமே இருப்பாங்க.

அதனால் யார் என்ன கோல்மால் வேலை செஞ்சாலும் ஒண்ணும் எடுபடாது.

அந்த அன்புக்கு முன்னாடி இவங்க தோற்பது உறுதி!

உறுதி! உறுதி! இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share