விநாயகர் சதுர்த்தி: எண்ணங்கள் ஈடேறி, முயற்சிகள் வெற்றி பாதையில் பயணிக்கட்டும்! – விஜய் வாழ்த்து

Published On:

| By Pandeeswari Gurusamy

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று (செப். 14) விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுவதும் சுமார் 36,000 விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை முதல் ஆங்காங்கே கோயில்களில் திரண்டு மக்கள் விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடுகளில் கலந்து கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் பொதுமக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “விநாயகர் சதுர்த்தி திருநாளில், அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ADVERTISEMENT

இத்திருநாளில் தொடங்கும் அனைத்து நற்செயல்களும் விநாயகப் பெருமானின் அருளால் இனிதே நிறைவேறி, புதிய நம்பிக்கைகள் மலர்ந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், வளமும் பெருகட்டும்!

மக்களின் எண்ணங்கள் ஈடேறி, அனைத்து முயற்சிகளும் வெற்றியின் பாதையில் பயணிக்கட்டும்!” என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share