பொருளாதார வல்லுநர் கலையரசன், விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டதாக கண்டனங்கள் எழுந்த நிலையில் அவரை முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 29) சந்தித்துப் பேசியுள்ளார்.
தமிழக அரசின் பொருளாதார நிலை குறித்து விமர்சனங்களை முன்வைத்த பேராசிரியர் கலையரசனை, சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாகக் கூறி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனநாயக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கலையரசன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் வெளியான பதிவுகளுக்காக அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை கலையரசன் இன்று சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின்போது தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலும் உடனிருந்தார்.
