அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு சென்றபோது மின்தடை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்தது முதல் பொதுமக்கள் மின்வெட்டு பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள், நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் என விஐபிகள் கலந்து கொள்ளும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் மின்தடை ஏற்படுகிறது.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 29) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த பக்தர்கள் டென்ஷனாகி உள்ளனர்.
அந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமியும் சாமி தரிசனத்திற்காக மீனாட்சியம்மன் கோயிலுக்கு வந்திருந்தார். அப்போது சுமார் 10 நிமிடங்கள் மின்சாரம் கட் ஆனதால் பக்தர்களும் எடப்பாடி பழனிசாமியும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்த எடப்பாடி பழனிசாமி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் கடுமையான மின்வெட்டு நிலவுவதற்கு இதுவே சான்று. மீனாட்சி அம்மன் கோயிலில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும்போதே திடீரென மின்வெட்டு ஏற்பட்டது. இந்த ஆட்சியில் பக்தர்கள் நிம்மதியாக சாமி கூட கும்பிட முடியவில்லை. நிம்மதியாக வாழவும் முடியாது பிரார்த்தனை செய்யவும் முடியாது” என்று கூறினார்.
