‘இதுதான் திமுக! இவ்வளவுதான் திமுக!’ – கண்ணதாசன் வரிகளை பேரவையில் சுட்டிகாட்டிய முதல்வர் விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

சட்டமன்றத்தில் இன்று பேசிய முதல்வர் விஜய் கண்ணதாசன் வரிகளை சொல்லி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் இன்று (செப்டம்பர் 7) காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் விஜய் பதில் அளித்து பேசுகையில், “இங்கு பல வருஷமாக, அரசியலில் இருக்கிற பெரியோர்கள் எல்லாம் என்ன சொல்றாங்க தெரியுமா? இதுல என்ன தப்பு இருக்கு? நாங்க அந்த காலத்துல பேசாத பேச்சா? என்கிறார்கள். அது அவங்களுக்கு தப்புன்னே தெரியல. அதை அவங்க ஞாபகப்படுத்திக்கிறாங்க. ஐயா பெரியோர்களே, அந்த காலத்தில் இருக்கிற அரசியலில் இருக்கிற நல்லதை மட்டுமே எடுத்துப்போம். இந்த அவதூறான, அசிங்கமாக பேசின அரசியல் நமக்கு எதுக்கு ?

ADVERTISEMENT

We should maintain political decency and decorum at least to an extent. அதுக்கப்புறம் அவங்க இஷ்டம், அவங்க எடுத்துக வேண்டும் என்றால் எடுத்துக்கட்டும், இல்லைன்னா விட்டு விடுவோம்.

நம்ம நண்பர்கள் எது பேசினாலும், மிசா பார்த்தவங்க, மிசா பார்த்தவங்க, எல்லாத்துக்கும் மிசாவை கொண்டு வந்து விட்டாங்கன்னா என்ன செய்வதுன்னு தெரியல. ஐயா பெரியோர்களே, எல்லாருக்கும் அந்த மிசாவை பத்தின ஹிஸ்டரியை பற்றி நல்லா தெரியும்.

ADVERTISEMENT

நடந்தது, நடக்கறது, நடக்கப் போறது, எல்லா மக்களும் பார்த்துட்டு இருக்காங்க. மக்களை விடவா நாம் இவங்களை வந்து கமெண்ட் பண்ணிடப் போறோம்? கவிஞர் கண்ணதாசன் அவர்கள், திமுக பற்றி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா ஒண்ணு சொன்னார், “பேசிப் பழகிய பொய்! வாங்கிப் பழகிய கை! போட்டுப் பழகிய பை!”

இதுதான் திமுக! இவ்வளவுதான் திமுக!

ADVERTISEMENT

ஒன்னே ஒண்ணு, ஒன்னே ஒண்ணு நான் சொல்ல வேண்டும் என ஆசைப்படுறேன்.

நம்முடைய அரசின் அடையாளம் தமிழ், தமிழர், தமிழ்நாடு. அவ்வளவுதான்!” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share