தமிழக சட்டசபையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை குறிப்பிட்டு வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் பேசியதற்காக முதல்வர் விஜய் வருத்தம் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 17) பேசிய வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார், முன்னாள் முதல்வர் கலைஞரை குறிப்பிடும் போது அவரது பெயரைக் குறிப்பிட்டு விமர்சித்தார். இதற்கு சபையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்ய எழுந்த முதல்வர் விஜய், ”உங்க தலைவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது (முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயரை) தவறுதான்.. அவர் சார்பாக நான் Sorry கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.
