அடுக்குமாடி குடியிருப்பில், தான் பெண் வேடமிட்டு, ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்கியதாக செய்திகள் வெளியான நிலையில், அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என விக்ரமன் எச்சரித்துள்ளார். vikraman on sexual harassment news
சென்னை அய்யப்பன்தாங்கலை அடுத்த பிரபல நிறுவனத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் பிக்பாஸ் பிரபலமும், விசிகவை சேர்ந்தவருமான விக்ரமன் கடந்த ஆண்டு மே மாதம் வரை வசித்து வந்தார். அதே குடியிருப்பில் தான் இயக்குநர் ராஜு முருகன் தனது குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜு முருகனின் மனைவி பெயர் ஹேமா சின்ஹா, அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளுக்கு எதிராக சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு புகார் அனுப்பி வைத்தார்.
அதில், “நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 3 மாதத்துக்கு ஒருமுறை ரூ.22 ஆயிரம் பராமரிப்பு தொகை கொடுத்தும் கூட குப்பையை சரியாக அகற்றுவது இல்லை. மின்சார பிரச்சனையை சரிசெய்யவில்லை. அடுக்குமாடி குடியிருப்பு வளாக நீச்சல் குளத்தில் எனது குழந்தைகளை தடுக்கின்றனர். இதுபற்றி கேள்வி கேட்டால் மனஉளைச்சலை குடியிருப்பு சங்க நிர்வாகிகள் தருகின்றனர். இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்தாலும் குடியிருப்பு நிர்வாகிகள் பேசி நடவடிக்கை எடுக்காதபடி தடுக்கின்றனர்” என்று அதில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சில வீடியோக்கள் வெளியாகியுள்ளது. அதில், அக்குடியிருப்பில் வசித்த பிக்பாஸ் பிரபலமும், விசிக பிரமுகருமான விக்ரமன் பெண் வேடமிட்டு, ஆண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முற்பட்டதாகவும், அவரை அங்கு பணியில் இருக்கும் ஊழியர்கள் மடக்கி பிடித்ததாகவும் சில தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன.

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்! vikraman on sexual harassment news
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தன்னை குறித்து வெளியான செய்திக்கு விக்ரமன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘சினிமா படப்பிடிப்பு சம்மந்தமாக நடந்த ஒன்றை வைத்து அடிப்படை ஆதாரமின்றி அவதூறு பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அறத்தின்படி செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்த பாலிமர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றி” என விக்ரமன் தெரிவித்துள்ளார்.