இசைஞானி இளையராஜா இசையமைப்பாளர் அல்ல. அவர் இசையில் ஆய்வுகளையும், புதிய புதிய தேடல்களையும் செய்து கொண்டிருப்பவர். அவரின் இலக்கு சிம்பொனி இசைக்கோர்வையை படைப்பது தான். சிம்பொனி இசைக் கோர்வைகளை விட சிறந்த இசையை அவர் ஏற்கனவே படைத்திருக்கிறார்.ilayaraja says about deva
எனினும், சிம்பொனி இசையை ஆவணப்படுத்துவதற்காகவே அவர் இப்போது வேலியண்ட் படைத்துள்ளார். இசைக்கடவுள் இளையராஜாவே இந்தியாவுக்குப் பெருமை தான். அதை வேலியண்ட் உலக நாடுகளிடையே நிரூபிக்கும் என்று தாராளமாக நம்பலாம்.
அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அதற்கு முன் சில இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்தார். கம்யூனிச மாநாடுகளில் இளையராஜா சகோதரர்கள் கச்சேரி செய்வார்கள். அப்போதே சொந்தமாக டியூன் போட்டு பாடுவார் இளையராஜா. பின்னர், சென்னை வந்து உதவி இசையமைப்பாளராக பணி புரிந்தார். அதே வேளையில் இசையை முறையாக கற்றுக் கொள்ள வேண்டுமென்கிற ஆர்வம் அவருக்குள் இருந்தது. இதையடுத்து, ஒருபக்கம் கர்நாடக இசை, மற்றொரு பக்கம் கிளாசிக் இசையை அணுஅணுவாக கற்றுக் கொண்டார்.

இசையை முறையாக கற்றுக்கொண்ட பின்னரே இளையராஜா இசையமைப்பாளராக மாறினார். முதல் படமான அன்னக்கிளி படத்தின் பாடல்கள் செம ஹிட் அடித்தது. பின்னர், மிகவும் பிஸியான இசையமைப்பாளராக மாறினார். மெல்லிசை, நாட்டுப்புறப்பாட்டு, கர்நாடக இசை, வெஸ்டர்ன் இசை என எல்லா வகையான பாடல்களையும் கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து கொண்டே இருந்தார்.ilayaraja says about deva
அதாவது சிந்து பைரவிக்கும் இசையமைப்பார். கேப்டன் பிரபாகரன் போன்ற அதிரடி படங்களுக்கும் இசையமைப்பார். அதைவிட, பின்னணி இசையில் பின்னி எடுப்பார். இந்தியாவில் வேறு எந்த இசையமைப்பாளரும் இளையராஜா போல பின்னணி இசையை தர முடியுமா ? என்றால் அது கேள்விக்குறிதான். அதனால்தான் 80 முதல் 2000 ஆம் ஆண்டு வரை இளையராஜாவே தமிழ்சினிமாவில் முன்னணியில் இருந்தார். 1992 ஆம் ஆண்டு ரோஜா படம் வெளி வந்த பிறகு , ஏ.ஆர். ரஹ்மான் கொஞ்சம் இளையராஜாவை அசைத்து பார்த்தார் அவ்வளவுதான். ஆனால், ஆலமரம் போல தமிழ் சினிமாவில் நிலை கொண்டிருந்தார் ராஜா.
சிம்பொனி இசை அமைப்பது இளையராஜாவின் நீண்ட கால ஆசை. சினிமாவில் இசையமைத்து கொண்டிருக்கும் போதே சில ஆல்பங்களை வெளியிட்டார். பொதுவாக சிம்பொனி என்பது வெளிநாடுகளில் இசைக்கப்படுவது. ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளை சிம்பொனியின் தாயகம் என்று கூறலாம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சிம்பொனி புதியது.
சிம்பொனி இசை நம்முடைய ரசிகர்களுக்கு அறிமுகமில்லை. எனினும், தமிழ் சினிமா ரசிகர்கள் சிம்பொனி இசையை என் இசையிலேயே கேட்டுள்ளனர். ‘மடை திறந்து பாடும் நதியலை நான்…’ ‘ஓ பிரியா பிரியா..’ ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி..’ போன்ற பாடல்களில் இடம்பெற்றிருப்பவை சிம்பொனி இசைதான் என்று இளையராஜாவே ஒரு முறை கூறியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ‘சிம்பொனி நம்பர் ஒன்’ என்கிற பெயரில் இளையராஜா ஒரு ஆல்பத்தை வெளியிட்டார். இந்த ஆல்பம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் பதியப்பட்டது. இப்போது, லண்டன் அப்பல்லோ அரங்கத்தில் பீத்தோவான், மொசார்ட் மாதிரி உலக மகா இசை மேதைகள் ஒரே நேரத்துல கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் கருவிகளையும் தன்னோட கை அசைவில் வாசிக்க வைக்கப் போகிறார் இளையராஜா. இந்திய இசையே இல்லாமல் சுத்தமான வெஸ்டர்ன் கிளாசிக்கலை இளையராஜா வாசிக்க உள்ளார். ilayaraja says about deva
வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசைக்கருவிகளில் வயலின், சாக்ஸபோன், புல்லாங்குழல், கிளாரிநெட், சாக்ஸபோன், தாள இசைக்கருவிகள் ஒரே நேரத்துல வாசிக்கப்படும். அதற்கேற்ப தியரியாக இசைக்குறிப்புகளை இளையராஜா 35 நாட்களில் எழுதியுள்ளார். மேற்கத்திய கிளாசிக்கல் இசையை நுணுக்கத்தோடு சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு சொல்ல வேண்டுமென்றால் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சயிரட் மராத்தி படத்தின் இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் சிம்பொனி இசை அமைத்திருந்தனர். அவர்கள் பாலிவுட் சென்று இந்த சிம்பொனியை உருவாக்கினர். இந்த சிம்பொனியும் ஹிட் அடித்தது. அதேபோலத்தான். லண்டன் அப்பல்லோ அரங்கத்தில் புகழ் பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவினர் இளையராஜாவின் சிம்பொனி குறிப்புகளுக்கு இசை வடிவம் கொடுக்கப் போகிறார்கள் .
ஒரு இந்தியன் வந்து நானும் சிம்பொனி பண்ணிட்டேன்னு கூறி இந்திய இசையை வாசித்தார் என்று சொல்லி விடக் கூடாது என்பதில் இளையராஜா மிகுந்த கவனத்தில் இருந்துள்ளார். அந்தளவுக்கு வேலியன்டுக்காக கடுமையாக அவர் உழைத்துள்ளார் என்று இளையராஜாவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
30 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 50 வருடங்களாக இசைத்துறையில் இளையராஜா இருக்கிறார். 81 வயதாகிறது. போதும் என்று களைத்ததில்லை. புதியது புதியதாக கண்டு பிடித்து கொண்டிருக்கிறார் இளையராஜா. இந்த உழைப்புதான் உலகம் முழுக்க போய் அவரை இசையமைக்க வைத்துள்ளது என்றால் மிகையல்ல.
நேற்று காலை லண்டனுக்குச் செல்லும் இளையராஜாவை அவரது குடும்பத்தினரும், ரசிகர்களும் வாழ்த்தி வழிஅனுப்பி வைத்தனர். அப்போது “நம் பெருமையைப் பறைசாற்ற லண்டன் செல்கிறேன். இது என்னுடைய பெருமையில்லை. நம் பெருமை. நம் தமிழ்நாட்டின் பெருமை. ‘incredible India’ போல நான் ‘incredible ilayaraja’. என்னைப்போல ஒருவர் இதுக்குமேல யாரும் வரப்போறதும் இல்ல, வந்ததும் இல்ல” என்று பெருமிதத்துடன் பேசியிருந்தார்.ilayaraja says about deva
இளையராஜா தனது இசைப்பயணத்தின் முக்கிய அத்தியாயத்தை எழுத லண்டன் புறப்பட்டு கொண்டிருக்கும் போதும், அவரிடத்தில் தேவையற்ற கேள்விகளை கேட்க பத்திரிகையாளர்கள் மறக்கவில்லை. இந்த கேள்வி இசையமைப்பாளர் தேவா பற்றி இருந்தது. அதாவது, எனது பாடல்களை 2 கே கிட்ஸ் கேட்பதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதற்கு , ராயல்ட்டி எல்லாம் கேட்க மாட்டேன் என்று தேவா கூறியுள்ளாரே என்கிற கேள்வி முன் வைக்கப்பட்டது.
இதை கேட்டதும், இளையராஜா சற்று அமைதியாகி, நான் இந்த கேள்விக்கு பதில் சொல்லவா இங்கு வந்தேன்? என்னிடம் தேவையற்ற கேள்விகளைக் கேட்காதீர்கள். நான் என் வேலையில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். உங்கள் அனைவராலும் நான் இங்கே இருக்கிறேன். நமது மகத்துவத்தை பறைசாற்ற லண்டன் போகிறேன். கடவுளின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்” என்று முடித்து கொண்டார்.

இளையராஜாவின் மூத்தமகனும், இசையமைப்பாளருமான கார்த்திக் ராஜா, “அப்பாவோட இசையில நம்ம தமிழ் மக்கள் உருகியிருக்காங்க. நம்மை ஆண்ட ஆங்கிலேயன் ஊருக்குப் போய் அங்கேயே டேக்கா காண்பிக்கிற மாதிரி, நம்ம ஊர் ஆள் அங்க சிம்பொனி அரங்கேற்றுவது தமிழனாக ரொம்பப் பெருமையாக உள்ளது. சிம்பொனி என்பது மேற்கத்தியர்களின் பாரம்பரிய இசை. அதை மொஸார்ட், பீத்தோவன் போன்றவர்கள் ரொம்ப நுணுக்கமாகப் பண்ணியிருக்காங்க.
அந்த மாதிரியான சிம்பொனியை அரங்கேற்ற அப்பாவுக்கு ரொம்ப நாள் ஆசை. நம்ம இளையராஜா சிம்பொனி அரங்கேற்றுவதை தமிழ் மக்களும் அந்த அரங்கில் நிறைந்து கேட்கனும்னு எனக்கு ஆசை. நிச்சயமாக அதை இங்கையும் அவர் வாசிப்பார். அதை நம்ம கேட்போம். அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று பேசியிருந்தார். ilayaraja says about deva
ராஜாவின் அந்த சிம்பொனியை நாமும் கேட்க போகும் அந்த நாளுக்காக காத்திருப்போம்.