திருச்சி வந்துள்ள முதல்வர் விஜய் விமான நிலையத்திலிருந்து ரோடு ஷோ மேற்கொண்டுள்ளார்.
தனக்கு வாக்களித்த திருச்சி கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க முதல்வர் விஜய் இன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை துரை வைகோ எம்.பி. அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, ரமேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரிகளும் பூங்கொத்து, புத்தகங்கள் கொடுத்து வரவேற்றனர்.
இதன் பின்னர் விமான நிலையத்தில் இருந்து முதல்வர் விஜய் ரோடு ஷோ புறப்பட்டார்.
பொதுக்கூட்டம் நடைபெறும் செயிண்ட் ஜோசப் கல்லூரி வரை விஜய் ரோடு ஷோ மேற்கொண்ட நிலையில், சாலையின் இரு புறங்களிலும் திரண்டிருந்த மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதல்வரின் ரோடு ஷோவை முன்னிட்டு வழி நெடுகிலும் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
