தலைமை செயலகத்தில் மின்வெட்டு- மின்சார வாரியம் விளக்கம்

Published On:

| By Mathi

Chennai Secretariat- Power Cut

சென்னையில் தலைமை செயலகத்தில் இன்று மின்வெட்டு ஏற்பட்டது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அக்டோபர் 12-ந் தேதி ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் அமைச்சர்கள் அறைகள் இருளில் மூழ்கிக் கிடந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கம்: சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும் இன்று (12.10.2026) காலை மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது.

தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள்) பராமரிப்பில் உள்ளன. முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின் சுவிட்சுகளில், ஒரு சுவிட்சின் பி-ஃபேஸ் (B-Phase) மின் விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதனை தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர்.

இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது. இவ்வாறு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share