“மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வரக்கூடாது” : முதல்வர் உத்தரவு!

Published On:

| By Kavi

சென்னையில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் விஜய் இன்று (அக்டோபர் 18) ஆய்வு மேற்கொண்டார். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில் நேற்று சென்னையில் அதீத கனமழை கொட்டி தீர்த்தது. 

ADVERTISEMENT

நேற்று இரவு முதல் சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் மழைநீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழை பாதிப்புகளை சமாளிப்பது குறித்து முதல்வர் விஜய் இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மழைக்கால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். 

ADVERTISEMENT

இந்த ஆய்வின்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை நீர் தேக்கம், மீட்பு பணிகளின் நிலவரம் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். 

இந்த நிகழ்வில் தலைமைச் செயலாளர் சாய் குமார், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, டிஜிபி மகேஷ் குமார் அகர்வால், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ADVERTISEMENT

அப்போது நேற்று பல்வேறு பகுதிகளிலும் தேங்கி இருந்த மழை நீரை அகற்றியது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து நேற்று இரவிலிருந்து பணியாற்றியவர்களுக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார். 

தொடர்ந்து பொதுமக்களுக்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட முதல்வர் விஜய் அங்கிருந்து புறப்பட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share