சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிகாலை 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு!

Published On:

| By Mathi

Heavy Rain-Oct.18

சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அக்டோபர் 18-ந் தேதி அதிகாலை 1 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும், ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையிலும் மாலை முதல் பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று இரவு 10 மணிக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். சில நேரங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

ADVERTISEMENT

மேலும் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், சேலம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 11 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த மழையால் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கக்கூடும். சாலைகள் வழுக்கக்கூடிய நிலையில் இருக்கும். சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம்.

ADVERTISEMENT

இந்த எச்சரிக்கை அக்டோபர் 18-ந் தேதி அதிகாலை 1 மணி வரை பொருந்தும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share