சென்னை பாரிமுனையில் 17.5 செ.மீ. மழை.. நுங்கம்பாக்கத்தில் 7.5 செ.மீ… வெளுத்து வாங்கும் கனமழை!

Published On:

| By Mathi

Chennai Rain

சென்னையில் இன்று (அக்டோபர் 17-ந் தேதி) கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பாரிமுனையில் மட்டும் 17.5 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதீப் ஜான் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வடசென்னையில் உள்ள பாரிமுனையில் 175 மி.மீ. (17.5 செ.மீ) மழை பெய்துள்ளது. தற்போது மத்திய சென்னை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

ADVERTISEMENT

சென்னையின் முக்கியப் பகுதிகளில் ஒன்றான நுங்கம்பாக்கத்தில் நேற்று 70 மி.மீ. (7 செ.மீ) மழை பதிவானது. இன்று இதுவரை 75 மி.மீ. (7.5 செ.மீ) மழை பெய்துள்ளது. அங்குத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

வடதமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.

ADVERTISEMENT

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளை நோக்கியும் மழை மேகங்கள் நகர்ந்து வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் வடசென்னையைத் தொடர்ந்து மத்திய சென்னை பகுதிகளிலும் கனமழை நீடித்து வருவதால், மழைப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share