தமிழகத்தில் வெளுக்கப் போகும் மழை.. இன்று செங்கல்பட்டில் மிக கனமழை.. 24 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்!

Published On:

| By Mathi

Tamil Nadu-Weather-Rain

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 17-ந் தேதி) செங்கல்பட்டு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி, கோவை, நீலகிரி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை, பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், லப்பைக்குடிக்காடு ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

வடதமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து கேரளா மற்றும் தமிழகப் பகுதிகள் வழியாக தென்மேற்கு வங்கக்கடல் வரை காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும்.

செங்கல்பட்டு- மிக கனமழை

இன்று அக்டோபர் 17-ந் தேதி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

24 மாவட்டங்களில் கனமழை

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, நீலகிரி ஆகிய 24 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நாளை அக்டோபர் 18-ந் தேதி, நீலகிரி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 17 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

அக்.19-ல் 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

அக்டோபர் 19-ந் தேதி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, கோவை, திருநெல்வேலி ஆகிய 21 மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்.20-ல் 9 மாவட்டங்களுக்கு மிக கனமழை வார்னிங்

அக்டோபர் 20-ந் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக். 21 முதல் அக்.23 வரை முன்னெச்சரிக்கை

அக்டோபர் 21-ந் தேதி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 22-ந் தேதி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

அக்டோபர் 23-ந் தேதி, நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், தேனி ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையில் இடி- மின்னல்- மிதமான மழை- கனமழை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 32 முதல் 33 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும்.

கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் இன்றும் நாளையும் மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share