தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. மேலும் தமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 17-ந் தேதி) காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சி விமான நிலையத்தில் 35.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்சமாக திருப்பத்தூரில் 21.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. மலைப்பகுதிகளில் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் குறைந்தபட்ச வெப்பநிலை 13 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 32.8 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 33.3 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 24.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தின் பிற பகுதிகளில் கரூர் பரமத்தியில் அதிகபட்சமாக 32.5 டிகிரி செல்சியஸ், மதுரையில் 33.4 டிகிரி செல்சியஸ், நாமக்கல்லில் 33.5 டிகிரி செல்சியஸ், பாம்பனில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய 14 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்ப நிலை விவரம்:

