லஞ்சம் கேட்கும் காவலர்களுக்கு செக்? ஆணையாளர் அமல்ராஜ் முக்கிய அறிவிப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Amal raj IPS

சென்னை பெருநகர காவல்துறையில் “ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு” புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.

ஊழலை ஒழிக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காவல்துறையினர் தங்கள் பணிகளைச் செய்ய லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 78717 23000 என்ற கைப்பேசி எண்ணில் நேரடியாகத் தொடர்புகொண்டோ அல்லது வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த எண்ணில் பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் முழுக்க முழுக்க ரகசியமாக வைக்கப்படும் என்றும், பெறப்படும் அனைத்துப் புகார்கள் மீதும் உரிய விசாரணை நடத்தப்பட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இத்திட்டம் படிப்படியாக மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பிற பெருநகரங்களுக்கும் இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share