சென்னை–மும்பைக்கு சிறப்பு ரயில்… காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாகவும் கூடுதல் ரயில் சேவை!

Published On:

| By Mathi

Special Train

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் நிலையில், பயணிகளுக்கு பயன்படும் வகையில் சிறப்பு ரயில் சேவைகள் (Special Train) அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை–மும்பை சிறப்பு ரயில்

மும்பை சிஎஸ்எம்டி–சென்னை கடற்கரை சிறப்பு ரயில் (01015), அக்டோபர் 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

ADVERTISEMENT

புதன்கிழமைகளில் மும்பை சிஎஸ்எம்டியில் நள்ளிரவு 12.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், அதே நாள் இரவு 11.30 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

மறுமார்க்கத்தில் சென்னை கடற்கரை–மும்பை சிஎஸ்எம்டி சிறப்பு ரயில் (01016), அக்டோபர் 15, 22, 29 மற்றும் நவம்பர் 5, 12, 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.

ADVERTISEMENT

வியாழக்கிழமைகளில் சென்னை கடற்கரையில் அதிகாலை 4 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கு மும்பை சிஎஸ்எம்டியை சென்றடையும்.

காட்பாடி, ஜோலார்பேட்டைக்கு சிறப்பு ரயில்

வடதமிழக பயணிகளுக்கு பயன்படும் வகையில் விசாகப்பட்டினம்–எஸ்எம்விடி பெங்களூரு இடையேயான சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை வழியாக இயக்கப்படுகிறது.

ADVERTISEMENT

விசாகப்பட்டினம்–எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயில் (08583), அக்டோபர் 6, 13, 20, 27 மற்றும் நவம்பர் 3, 10, 17, 24 ஆகிய செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.

விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 8.30 மணிக்கு காட்பாடி வந்தடையும். அங்கிருந்து காலை 8.35 மணிக்குப் புறப்பட்டு, 9.48 மணிக்கு ஜோலார்பேட்டை வந்தடையும். 9.50 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 12.45 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூருவை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் எஸ்எம்விடி பெங்களூரு–விசாகப்பட்டினம் சிறப்பு ரயில் (08584), அக்டோபர் 7, 14, 21, 28 மற்றும் நவம்பர் 4, 11, 18, 25 ஆகிய புதன்கிழமைகளில் இயக்கப்படும்.

பெங்களூருவில் பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்படும் இந்த ரயில், மாலை 6.43 மணிக்கு ஜோலார்பேட்டை வந்தடைந்து 6.45 மணிக்குப் புறப்படும். இரவு 7.58 மணிக்கு காட்பாடி வந்தடைந்து 8 மணிக்குப் புறப்படும். மறுநாள் பிற்பகல் 1.30 மணிக்கு விசாகப்பட்டினத்தை சென்றடையும்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள பண்டிகை கால அறிவிப்புகளில் மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ்–திருவனந்தபுரம் வடக்கு இடையேயான சிறப்பு ரயிலும் இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் தமிழ்நாடு வழியாக இயக்கப்படவில்லை.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share