சென்னை திருமங்கலம் உட்பட 3 மெட்ரோ ரயில் நிலையங்களில் கட்டிடங்களுக்குள் ரயில் நிலையம் இருக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Chennai metro rail in 12 storey
சென்னையில் அத்தியாவசிய பொது போக்குவரத்தில் ஒன்றாக இருப்பது மெட்ரோ ரயில்கள். நாள்தோறும் சென்னை மெட்ரோ ரயிலில் ஆயிரக்கணக்கான பேர் பயணம் செய்து வருகின்றனர்.
தற்போது சென்னையில் நீலம் மற்றும் பச்சை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் 2ஆம் கட்டம் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் திருமங்கலம், கோயம்பேடு, திருமயிலை ஆகிய மூன்று இடத்தில் ரயில் நிலையத்துடன் கட்டிடங்களை மேம்படுத்துவதற்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடத்தின் வழியாக செல்லும் ரயில் 3வது மாடியில் உள்ள நிலையத்தில் நிறுத்தப்படும். ரயில் நிலையத்துடன் இணைந்த கட்டிடத்தை கட்டுவதற்கான மாதிரி வடிவமைப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர்,
“கட்டடங்கள், மக்கள் செயல்பாடுகள் மற்றும் பொதுப் போக்குவரத்தை ஒன்றாகக் கொண்டு வருவதற்காக மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள சொத்துக்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். மூன்று இடங்களில் உள்ள நிலையங்களை கட்டுவதற்கான செலவு கட்டம்-2 திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக மாநில அரசிடம் நிதி கோருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”கோயம்பேட்டில் 2ஆம் கட்ட ரயில்நிலையத்தை சுற்றி காலி மனைகள் அமைக்கப்பட உள்ளது. ஆவடிக்கு மூன்றாவது வழித்தடத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டு, மூன்று வழித்தடங்களையும் இணைக்கும் பொதுவான பாதை அமைக்கப்படும்.
திருமயிலையில், ஐந்து நுழைவு/வெளியேறும் வழிகளில் ஒன்று கட்டிடத்திற்குள் இருக்கும்.
விம்கோ நகர் நிலையத்திற்கு மேல் 20 மாடி கட்டிடம், 4 அடுக்கு கார் பார்க்கிங் திட்டமிடப்பட்டுள்ளது. இது போன்ற வசதிகள் ஏற்கனவே பல இடங்களில் உள்ளன.
சீனாவின் சோங்கிங்கில் உள்ள 19 மாடி குடியிருப்பு வளாகத்தில் ஆறாவது மாடியில் மெட்ரோ நிலையம் உள்ளது. நாக்பூரில் உள்ள ஜீரோமைல் மெட்ரோ நிலையத்திற்கு மேலே 15-அடுக்கு நட்சத்திர ஹோட்டல் திட்டமிடப்பட்டுள்ளது” என்று மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த திட்டம் குறித்து முன்னாள் மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் இயக்குநர் ஆர்.ராமநாதன்,
“ரயில்கள் முழுவதுமாக இயங்கினாலும் பயண செலவு மற்றும் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு டிக்கெட் வருவாயை கொண்டு மட்டுமே சமாளிக்க முடியாது.
விளம்பரங்களை வைப்பது, நிலையங்களில் சில்லறை விற்பனை கடைகளுக்கு அனுமதி அளிப்பது போன்றவை அதிக வருவாயை ஈட்டுவதற்கான ஒரே வழி” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
விராட், ரோஹித்தின் அதிரடி முடிவால்… பெரும் தலைவலியில் சிக்கித்தவிக்கும் பிசிசிஐ
அதிமுக ஐடிவிங் கூட்டம் : எடப்பாடி நடத்திய மாஸ்டர்கிளாஸ்!
Chennai metro rail in 12 storey
