வீரமணியின் பாலியல் வீடியோவை கணேசனுக்கு அனுப்பியது யார்? பின்னணியைத் தோண்டும் போலீஸ்!

Published On:

| By Kavi

ஜெம் வீரமணி வழக்கில் கைது செய்யப்பட்ட கணேசனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. 

தேனாம்பேட்டையில் வீடு வாடகை எடுத்து சிறுமிகளுக்கு  பாலியல் தொல்லை அளித்ததாக ஜெம் கிரானைட்ஸ் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

ADVERTISEMENT

அவரது கூட்டாளிகளான சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகியோரும் கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று கணேசன் என்பவர் கைது செய்யப்பட்டார். 

இவர் ஜெம் வீரமணியுடன் 23 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். 

ADVERTISEMENT

தற்போது பாலாஜி குளோபல் என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். 

தனது செல்போனில் வீரமணி சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற வீடியோவை வைத்திருந்தது, அதைப்பற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காதது ஆகிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூறியுள்ளது. 

ADVERTISEMENT

போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு செப்டம்பர் 22 முதல் 14 நாட்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை அடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

தொடர்ந்து கணேசனுக்கு சிறுமியின் ஆபாச வீடியோவை அனுப்பியது யார்? அந்த வீடியோ குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் வைத்திருந்தது பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த மூல வழக்கிலேயே கணேசனின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வழக்கில் பதிவு செய்யப்பட்ட சட்டப்பிரிவுகள் இவரது கைதுக்கும் பொருந்தும். புதிதாக எஃப் ஐ ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

 இந்த வழக்கை மறைப்பதற்காக தொழிலதிபர்களுக்கும் வீரமணிக்கும் இடையே நடைபெற்ற நிதி மற்றும் நில பரிவர்த்தனைகள் உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share