தங்கம் வாங்க திட்டமா? உச்சம் தொட்ட சவரன் விலை! எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

Published On:

| By Pandeeswari Gurusamy

Gold

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 20) ஒரு சவரன் தங்கம் ரூ. 1600 வரை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலகளாவிய தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகின்றன. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

இன்றைய தங்கம் விலை

சென்னையில் நேற்று காலை 22 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் தங்கம் ரூ.680 சரிந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது. பின்னர் மாலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,15,200க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.14,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1600 உயர்ந்து ரூ.1,16,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அதேபோல் இன்று 18 கேரட் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.200 உயர்ந்து ரூ.12,380க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1600 உயர்ந்து ரூ.99,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.10 உயர்ந்து ரூ.260 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 வரை உயர்ந்து ரூ.2,60,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை நிலவரம் (ஒரு சவரன்)

19-8-20261,15,200
18-8-20261,14,320
17-8-20261,14,160
16-8-20261,13,760
15-8-20261,13,760
14-8-20261,13,600
13-8-20261,13,760
12-8-20261,13,600
11-8-20261,13,200
10-8-20261,11,620

கடந்த 10 நாட்களில் வெள்ளி விலை நிலவரம் (ஒரு கிராம்)

19-8-2026250
18-8-2026255
17-8-2026255
16-8-2026255
15-8-2026255
14-8-2026255
13-8-2026260
12-8-2026260
11-8-2026260
10-8-2026250
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share