தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (மே 10) முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வராக விஜய்யும், அவரைத் தொடர்ந்து 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ஆளுநர் அர்லேகா, நேரு ஸ்டேடியத்தில் இருந்து கிளம்பினார். அவரை வழியனுப்பி வைத்துவிட்டு வந்த முதல்வர் விஜய் முதல் கையெழுத்தாக இரு மாதங்களுக்கு 200 யூனிட்க்கு கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.
அதைத்தொடர்ந்து சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதை பொருள் தடுப்பு படை உருவாக்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார்
