பழனி: ரூ100 கோடி நில மோசடி- ‘சஸ்பெண்ட்’ சார் பதிவாளர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை!

Published On:

| By Mathi

Palani Rs 100 Crore Land Scam: Sub-Registrar Justin Manigandan Arrested

பழனியில் ரூ.100 கோடி நில மோசடி விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் லிங்கா அவென்யூ பகுதியில் உள்ள ஜஸ்டின் மணிகண்டன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் 8 பேர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ100 கோடி மதிப்பிலான நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்ததாக ஜஸ்டின் மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை முன்ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share