காங்கிரஸ் பிரதமர்கள் கண்டுகொள்ளாததை மோடி செய்திருக்கிறார்: அன்புமணி

Published On:

| By Aara

வருகிற மக்கள் தொகை கணக்கெடுப்போடு, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஏப்ரல் 30 ஆம் தேதி,  பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் முடிவெடுத்துள்ளது.

இதற்கு பல்வேறு கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி, மாநில அரசும்  இது தொடர்பான சர்வே எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

இன்று (மே 1) சென்னையில் செய்தியாளர்களிடம்   பேசிய அன்புமணி,

“மத்திய அரசின் முடிவை பாமக முழுமையாக வரவேற்கிறது. இதை வலியுறுத்தி, மருத்துவர் ஐயா 45 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.  ஆயிரக்கணக்கான கடிதங்கள் எழுதியிருக்கிறார். ஆர்பாட்டம் நடத்தி பல பாமகவினர்  சிறைக்கு சென்றார்கள்.

ADVERTISEMENT

சாதி வாரிக் கணகெடுப்புக்காக பல பிரதமர்களை சந்தித்தார் டாக்டர்  ராமதாஸ். ராஜீவ் காந்தி அவர்களை இதற்காக சந்தித்தார். வி.பி.சிங், வாஜ்பாய்,.  மன்மோகன் சிங் ஆகியோரை பல முறை சந்தித்தார். பிரதமர் மோடியையும் பல முறை சந்தித்து வலியுறுத்தினார்.

மக்கள் தொகை  கணக்கெடுப்போடு சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவதாக பிரதமர் மோடி அறிவித்ததன் மூலம் டாக்டர் ராமதாஸ் வெற்றி பெற்றிருக்கிறார்..இந்த வெற்றி  ராமதாசையே சேரும். Caste census pm modi anbumani praised

ADVERTISEMENT

இடையில் இதை வைத்து யார் யாரோ அரசியல் செய்கிறார்கள். சமூக நீதிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம், இதில் தங்களுக்கு பங்களிப்பு இருக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை மட்டுமல்ல,  எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையான  பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசியல் சாசன அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதையும் பிரதமர் மோடி வந்த  பிறகு நிறைவேற்றியிருக்கிறார்.

காங்கிரஸ் ஆட்சியில் நான் அமைச்சராக இருந்தபோதும் பிரதமர் மன் மோகன் சிங்கிடம், பல முறை வலியுறுத்தியும் அவர் இதை செய்யவில்லை.

காங்கிரஸ், திமுக இதற்கு சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. சுதந்திர இந்தியாவில் முதல் முதலாக ஒரு அரசு, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று அறிவித்த அரசு மோடி அரசுதான்.

காங்கிரஸ் ஏன் அறிவிக்கவில்லை? சமீபத்தில் ராகுல் காந்தி சொல்லிக் கொண்டிருப்பது வேறு. உங்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது என்ன செய்தீர்கள்?

காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சர்  சிவராஜ் பாட்டிலிடம் 140 எம்பிக்களின் கையெழுத்து பெற்று  அழுத்தம் கொடுத்தோம். ஆனால் இதை ஒரு சர்வே என்று சொல்லி சோஷியல் வெல்ஃபேர் மினிஸ்டிரிக்கு கொடுத்துவிட்டனர். சாதிவாரி கணக்கெடுப்பை உள்துறைதான் நடத்த வேண்டும். ஆனால் நடத்தவில்லை. அப்போது திமுக  என்ன செய்தது?

2001 இல் துணை பிரதமர் அத்வானி சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புக் கொண்டார். ஆனால் அப்போது குஜராத் பூகம்பம்  வந்ததால் கைவிடப்பட்டது.

நான் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக  பல முறை  பேசியிருக்கிறேன்.

எங்களுடைய கோரிக்கை… தமிழ்நாட்டில் சாதி வாரி சர்வே தமிழக அரசே எடுக்க வேண்டும். பிரதமர் அறிவிப்பு பற்றி, இது எங்கள்  வெற்றி என்று சொல்கிறார் முதல்வர். உங்களுக்கும் சமூக நீதிக்கும் என்ன சம்பந்தம்?Caste census pm modi anbumani praised

சென்சஸ் என்பது மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அதன் கூட சாதி வாரி கணக்கெடுப்பு என்பது அடிஷனல் டேட்டா.

கடைசி சென்சஸ் 2010  இல் ஆரம்பித்து அதன் விவரங்கள் அறிவிக்கப்பட்டது   2013 இல்.

இப்போது அடுத்த சென்சஸில் சாதி வாரி  மக்கள் தொகைக் கணக்கெடுப்பும்  சேர்த்து எடுப்போம் என்று அறிவித்துள்ளது மத்திய அரசு. 2026 அல்லது 2027 இல் எடுப்பார்கள். சென்சஸ் டேட்டா, சாதி டேட்டா வருவதற்கு ஐந்தாறு ஆண்டுகள் ஆகும். இதான் எதார்த்தம்

இதற்கிடையில் தமிழக அரசை சாதி வாரி சர்வே எடுக்க வேண்டும் என்று கேட்கிறோம். உச்ச நீதிமன்றத்தில் 67% இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரும். உச்ச நீதிமன்றம் இதில் கேட்பது டேட்டா.  மத்திய அரசு எடுப்பதற்கு 6 ஆண்டுகள் ஆகும். இடையில் வழக்கு வந்துவிட்டது என்றால் 69%  இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிடுவார்கள்.

2008 இந்திய புள்ளியியல் சட்டம் நிறைவேற்றினார்கள். அதன்படி மத்திய அரசு,  மாநில அரசு, உள்ளாட்சி பிரதிநிதிகள்  கணக்கெடுப்பை நடத்தலாம். ஒரு பஞ்சாயத்து தலைவரே   நடத்தலாம். ஆனால்  தமிழ்நாடு அரசு எடுக்கவில்லை.

மத்திய அரசு எடுக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு முடிவுகள் கிடைப்பதற்கு ஐந்தாறு ஆண்டுகள் ஆகலாம். அதனால் தமிழ்நாடு அரசு  ஏற்கனவே தெலங்கானா, கர்நாடகா மாநில அரசுகள் எடுத்தது போல சாதி சர்வே எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் டாக்டர் அன்புமணி. Caste census pm modi anbumani praised

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share