தவெக பெண்கள் மீது விமர்சனம்: ’கலாம் ஆலோசகர்’ பொன்ராஜ் மீது பாய்ந்தது அதிரடி வழக்கு! பின்னணி என்ன?

Published On:

| By Mathi

Ponraj TVK Vijay

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) பெண் தொண்டர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக சமூக செயற்பாட்டாளரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆலோசகருமான பொன்ராஜ் (Ponraj) மீது கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் தொண்டர்களை பொன்ராஜ், கடந்த மார்ச் மாதம் இழிவாக விமர்சித்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இதனால் அக்கட்சியினர் கொந்தளித்தனர்.

ADVERTISEMENT

டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்

தவெக தலைவரான இந்நாள் முதல்வர் விஜய் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி இரவு சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்திருந்தார்.

அத்துடன் பொன்ராஜுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கையும் விஜய் வெளியிட்டிருந்தார்.

ADVERTISEMENT

விளக்கம் கொடுத்த பொன்ராஜ்

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 26-ந் தேதி பொன்ராஜ் தமது எக்ஸ் பக்கத்தில், “நடிகர் விஜய் அவர்களே! ஆதாய‌ சூதாடி‌ நீங்களா? நானா?

ADVERTISEMENT

உங்களை தலைவன் என்று நேசிக்கிற பெண்களில் சில பேர் ஊடகங்களில் தரம் தாழ்ந்து :

1) அக்காவா இருப்போம், தங்கச்சியா இருப்போம், விஜய்க்கு பெண்டாட்டியா கூட இருப்போம் என்று பொது வெளியில் பேசியதை கண்டித்து திருத்தாமல் அதை அதை ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் ஆதாய அரசியல் சூதாடியா, நானா?
2) எனக்கு என்‌புருஷனை விட விஜய்தான் பிடிக்கும் என்ற பெண்மணியை கண்டித்து திருத்தாமல், ரசித்து கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய‌ சூதாடியா, நானா?
3) குப்பை கூட்டிடுறவ கூட நாலு புருஷன் வச்சிருக்கான்னு ஒரு மாணவி பேசி பின்னர் செயலுக்கு வருத்தம் தெரிவித்தாரே – அதை கூட ரசித்துக்கொண்டிருந்த நீங்கள் அரசியல் ஆதாய‌சூதாடியா, நானா?

4) உங்களை அரசியல் ரீதியாக நான்‌ செய்யும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல், எதற்கெடுத்தாலும் திமுக பின்னால் இறுக்கிறது என்று திமுக போபியா பிடித்து,எதைச் சொன்னால்பித்தம் தெளியும் என்று அலையும் நீங்கள் அரசியல் ஆதாய சூதாடியா, நானா?

வெர்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? என்ன ஒரு‌ இழி நிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள். அரசியலில் நான்‌கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை‌ என்றால் இப்படியா வசை பாடுவது.‌

கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல. எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சில நாதாரிகள் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக

நான்‌ பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள்

5) இன்று காலையில் இருந்து இப்போதுவரை நூற்றூக்கணக்கான மிரட்டல் கால்கள், சமூக வளைத்தளத்தில், வாட்ஸ்ஆப்பில் என்னையும், என் குடும்பத்தையும் இழிவாக, தரக்குறைவாக பேசி திட்டுவதற்கு தான் வெர்சுவல் வாரியர்களை உருவாக்கி வைத்திருக்கிறீர்களா? என்ன ஒரு‌ இழி நிலைக்கு இறங்கி இருக்கிறீர்கள்.

அரசியலில் நான்‌கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வக்கு இல்லை‌ என்றால் இப்படியா வசை பாடுவது.‌

நான்‌ பெண்களை எப்போதும் கண் போல போற்றுபவன், உங்களை போல் வீட்டில், சினிமாவில், உங்கள் கட்சியில் பெண்களை அவமரியாதையாக நடத்திவிட்டு, அரசியலில் பெண்ணை போற்றுபவன் போல் நடிப்பவன் அல்ல.

எந்த பெண்ணையும் அது உங்கள் ரசிகையாக இருந்தாலும் இழிவு படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை.

ஆனால், பொது வெளியில் காலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் சில நாதாரிகள் பெண்களாக, உங்கள் ரசிகர்களாக இருந்தாலும், I will call spade as spade.

எனவே எனக்கு பாடம் எடுக்கும் முன்பு, நீங்கள் பெண்ணை மதித்து போற்ற கற்றுக்கொள்ளுங்கள், உங்களுக்காக காயம்பட்டு, உயிர்நீத்த இளைஞர்களின் குடும்ப பெண்களிடம் மன்னிப்பு‌கேளுங்கள்.‌

உங்கள் கட்சி பெண்களுக்கு உங்கள் கட்சி ஆட்களால் இழைக்கப்படும் பாலியல் பலாத்காத்திற்கு ஆளாக்கப்பட்டு பேட்டி கொடுத்த பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.‌

உங்களை பார்க்க வந்து காரை மறித்து நியாம் கேட்ட உங்க கட்சி கார பெண்ணை உங்கள் காரில் இடித்து தள்ளி விட்டு சென்றதிற்கு மன்னிப்பு கேளுங்கள்.‌

இதை முதலில் நீங்கள் செய்தால், நானும் என் சொல்லால் காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.‌

மீண்டும் சொல்கிறேன், நான்‌ எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன்.‌

எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.‌” என கூறியிருந்தார்.

இந்நிலையில் தமிழக தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது.தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ந் தேதி முதல்வராக பதவியேற்றார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தவெகவினர், பொன்ராஜ் மீது அனைத்து மாவட்டங்களிலும் புகார் கொடுத்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிரெண்டிங்காக்கி வந்தனர்.

கடலூர் போலீசார் நடவடிக்கை

இந்த பின்னணியில் கடலூர் த.வெ.க. எம்.எல்.ஏ. ராஜ்குமார் ஏற்கனவே மார்ச் மாதம் கடலூர் போலீசில் பொன்ராஜ் மீது கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வர் விஜய் அலுவலகத்துடன் போலீசார் ஆலோசித்தனர்.

இதனையடுத்து முதல்வர் விஜய் அலுவலக அறிவுறுத்தலின் பேரில் தற்போது பொன்ராஜ் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மேல் நடவடிக்கையாக பொன்ராஜ் கைது செய்யப்படுவாரா? இல்லையா? என்பது குறித்து உரிய அறிவுறுத்தல்களின் படி முடிவெடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share