நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்ற 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை நடந்த பயங்கரவாத தாக்குதல்களை பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி பட்டியலிட்டுள்ளது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.
பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை மிக கடுமையாக விமர்சிப்பவர். ஆனாலும் பாஜக அவரை கட்சியில் இருந்து நீக்கவில்லை.
இந்நிலையில் தமது எக்ஸ் பக்கத்தில் சுப்பிரமணியன் சுவாமி இன்று வெளியிட்ட பதிவு:
2014 – கதுவா லாரி கடத்தல்
2014 – பராண்டா மோர் நிலக்கண்ணி வெடிப்பு
2014 – ஆர்னியா தற்கொலைத் தாக்குதல்
2014 – உரி தற்கொலைத் தாக்குதல்
2015 – கதுவா காவல் நிலைய தற்கொலைத் தாக்குதல்
2015 – சோபியான் மாவட்ட தீவிரவாதத் தாக்குதல்
2015 – பதான்கோட் விமானப்படைத் தளம் மீதான தாக்குதல்
2016 – பாரமுல்லா தாக்குதல்
2016 – உரி தாக்குதல்
2017 – சோபியான் தாக்குதல்
2017 – குல்காம் வங்கி வாகனம் மீதான தாக்குதல்
2017 – அனந்த்நாக் தாக்குதல்
2017 – அமர்நாத் யாத்திரை தாக்குதல்
2017 – சோபூர் குண்டுவெடிப்பு
2018 – சுஞ்சுவான் தற்கொலை படைத் தாக்குதல்
2018 – சோபியான் மாவட்ட அர்ஹாமா தாக்குதல்
2018 – குல்காம் லாரூ கிராமத் தாக்குதல்
2019 – புல்வாமா தாக்குதல்
2019 – அனந்த்நாக் தாக்குதல்
2019 – பெங்காலி தொழிலாளர்கள் மீதான தாக்குதல்
2020 – சி.ஆர்.பி.எப் படை மீதான தாக்குதல்
2021 – ஸ்ரீநகர் தாக்குதல்
2022 – ரஜோரி தற்கொலைத் தாக்குதல்
2023 – ராணுவ வாகனம் மீதான தாக்குதல்
2024 – ரியாசி தாக்குதல்
2024 – கதுவா தாக்குதல்
2025 – பகல்காம் தாக்குதல்
பிரதமர் மோடி பதவியேற்ற பின்னர் நடந்த தீவிரவாத தாக்குதல்களை என்பதைக் குறிக்கும் வகையில் சுப்பிரமணியன் சுவாமி பதிவிட்டிருப்பதற்கு பாஜகவினரே கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
