விஜய் மன்னிப்பு கேட்கனும்.. ’அந்த’ 2017 வீடியோ பாருங்க.. அதிமுக கொந்தளிப்பு- ஏன்?

Published On:

| By Mathi

TVK MLA's Controversy remark on Jallikattu: AIADMK Demands Vijay’s Apology

தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தவெக எம்.எல்.ஏ. கருப்பையா பேசியதற்கு முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தி உள்ளது.

சட்டசபையில் நேற்று (ஆகஸ்ட் 28) பேசிய சோழவந்தான் தொகுதி தவெக எம்.எல்.ஏ. கருப்பையா, “இளைஞர் சமூகத்தை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு” என்றார். அவரது இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

ADVERTISEMENT

அதிமுகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், “ தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி இழிவாக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஜல்லிக்கட்டிற்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூரை தனது தொகுதியில் வைத்துள்ள ஒரு சட்டமன்ற உறுப்பினர் இப்படி பேசியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

சங்க காலம் தொட்டே தமிழர்களுக்கும் மாடுகளுக்குமான உறவை பறைசாற்றும் இந்த “ஏறு தழுவுதல்” பற்றி புரிதல் இல்லாமலா அந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இருப்பார்?

மாணவர்கள், இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு நடத்திய வரலாற்றுப் புரட்சியின் விளைவாக, அன்றைய அஇஅதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்ற ஒரு உரிமையை, மிகவும் கீழ்த்தரமாக பேசியுள்ள சட்டமன்ற உறுப்பினரின் இந்த பேச்சு ஏன் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்படவில்லை?

ADVERTISEMENT

ஜல்லிக்கட்டிற்கு தடை கொண்டு வர வேண்டும் என்று இன்றைய பொய்க்கால் குதிரை அரசு நினைத்து, அதற்கான First Look-ஆக தனது MLA-வை பேச வைத்துள்ளாரா இன்றைய முதல்வர்? என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு வலுவாக எழுகிறது.

தனது MLA பேசிய பேச்சிற்கு முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்! ஜல்லிக்கட்டு குறித்த இந்த அரசின் நிலைப்பாட்டை சட்டமன்றத்தில் அறிவிக்க வேண்டும்!

(பி.கு. : Incase you have forgotten, 2017-ல் “இதுக்கு காரணமான அமைப்பை வெளியே அனுப்’பீட்டா’ ” என்று நீங்கள் வெளியிட்ட வீடியோவை மீண்டும் ஒரு முறை பார்க்கவும் @actorvijay !)” என பதிவிடப்பட்டுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share