பாகிஸ்தானிலும் உருமாறும் ‘Vijay Thalapathi’ ஃபேஸ்புக் பக்கங்கள்!

Published On:

| By Mathi

Facebook Pages Renamed to 'Vijay Thalapathi' in Pakistan

வட இந்தியாவில் முதல்வர் விஜய்க்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் போலி செய்திகள் பகிரப்படும் நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தங்களது ஃபேஸ்புக் பக்கங்களின் பெயர்களை “Vijay Thalapathi” என மாற்றுவது சர்ச்சையாகி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசின் தகவல் சரிபார்க்க முன்னாள் இயக்குநர் ஐயன் கார்த்திகேயன் தமது எக்ஸ் பக்கத்தில், “Vijay Thalapathi’ ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்.. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.

ADVERTISEMENT

தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் ‘Vijay Thalapathi’ என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன. இது எங்க போய் முடியுமோ !” என போட்டோ ஆதாரங்களுடன் பகிர்ந்துள்ளார்.

@ADMK_Trends என்ற ஐடியில், “ Vijay Thalapathi’ ஆக மாறும் பாகிஸ்தான் ID-கள்!
வட இந்தியாவைத் தொடர்ந்து, தற்போது பாகிஸ்தான் சமூக வலைதள கணக்குகளிலும் விஜய் ஆதரவு பெயரில் பொய்ச் செய்திகள், AI வீடியோக்கள்!” என பதிவிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

@SaranVinoth8 என்ற நெட்டிசன், “ பாகிஸ்தானின் சமூக வலைதள ஐடிகளில் விஜயின் புகைப்படத்தோடு விஜய் தளபதி என்று ஐடிக்கள் முளைப்பதின் ரகசியம் என்ன? இந்தியாவின் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ..” என கேள்வி எழுப்பி உள்ளார்.

@gopi_samsan என்ற நெட்டிசன், “வேற என்ன அடுத்ததாக இலங்கை பாகிஸ்தான் வட மாநிலம், பங்களாதேஷ் காசுக்கு வேலை செய்யும் இளைஞர்கள் ஏதோ விஜய்-ன் நீண்ட கால அரசியல் அனுபவசாலியாக முன்னிறுத்துவதன் மூலமாக அடுத்த ஆட்சியை எந்த பக்க ஸ்திரதன்மை இல்லா ஆட்சியை இந்தியா வில் அமைக்க விரும்புகிறது அமெரிக்கா/ஐரோப்பா சக்திகள்” என குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share