வைஃபை ஆன் செய்ததும், “வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. எம்ஜிஆர் பாட்டுடன் களமிறங்கிட்டீங்க?
எம்ஜிஆர் பாட்டு அப்படிங்கிறதை விட எவ்வளவு அர்த்தமுள்ள பாடல் வரிகள்.. நம்ம சிஎம் புழல் ஜெயிலுக்கு போய்ட்டு வந்திருக்காரு பார்த்தீங்களா?
ப்ரோ.. இப்படி மொட்டையா சொன்னா ‘பக்’-ன்னு இருக்குதே..
விளக்கமாகவே சொல்றேன்.. சென்னையை அடுத்த புழல் சிறைக்கு சிஎம் விஜய் நேத்து போனார்.. புழல் சிறையில கைதிகளுக்கான அடிப்படை வசதிகள், அவங்களுக்கு கொடுக்கிற சாப்பாடு எல்லாத்தையும் விஜய் ஆய்வு செஞ்சார்..

அதே மாதிரி புழல் மத்திய சிறை-1ல் இருக்கிற விசிட்டர்ஸ் மூலம், ஹாஸ்பிடல், சமுதாயக் கல்லூரி கிளாஸ் ரூம், லைப்ரரி, கம்ப்யூட்டர் சென்டர், தூக்கு மேடை பகுதின்னு எல்லாவற்றையும் பார்த்தார்..
கைதிகள்கிட்டேயும் அவங்களுக்கான வசதிகள் பத்தி விஜய் கேட்டு தெரிஞ்சுகிட்டாரு.. சிறைவார்டன்களிடமும் பேசி அவங்களோட குறைகளையும் கேட்டாரு.. அப்ப ப்ரோமஷன் பத்தி விஜய்கிட்ட சிறைவார்டன்கள் தங்களோட குறையா சொன்னாங்க..

அடுத்து புழல் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனார் சிஎம் விஜய். அங்க இன்ஸ்பெக்டர் தன்னோட சேரில் சிஎம் விஜய்யை உட்கார சொல்லி அழைக்க, விஜய்யோ இன்ஸ்பெக்டரை அவரு சேரிலேயே உட்கார சொல்லிட்டு அவருக்கு எதிர்புறமா இருந்த சேர்ல உட்கார்ந்து சில கேள்விகளை கேட்டு பதில் வாங்கிட்டார்.. இப்படி பேசிகிட்டு இருக்கும் போது இணை, துணை கமிஷனர்கள் எல்லாம் இன்ஸ்பெக்டருக்கு எதிரில நின்னுகிட்டுதான் இருந்தாங்க..
சிஎம் விஜய்யோட இந்த திடீர் போலீஸ் ஸ்டேஷன், ஜெயில் விசிட் பத்தி அவருக்கு நெருக்கமானவங்ககிட்ட பேசுனப்ப, “சிஎம் விஜய்யின் போலீஸ் ஸ்டேஷன், ஜெயில் விசிட் எல்லாமே ஜோதிடர் அட்வைஸ்தான்.. இதுல வேற மோட்டிவ் எதுவும் இல்லை.

சிஎம் விஜய்-க்கு, அவரோட ஜாதக அமைப்பில ராமரையே வனவாசத்துக்கு அனுப்புன மாதிரியான சில அம்சங்கள் இப்ப இருக்கு. அதனால வழக்கு, சிறைன்னு வர்றதுக்கும் சான்ஸ் இருக்குன்னு ஜோதிடர்கள் சொல்லி இருக்காங்க.
அதோட இப்படியான ஒரு நிலைமையை தவிர்க்க, பரிகாரம் செய்யுற மாதிரி போலீஸ் ஸ்டேஷனுக்கு, ஜெயிலுக்கு போய்ட்டு வாங்க.. அப்படி செஞ்சுட்டா தொந்தரவு இருக்காதுன்னு சிஎம் விஜய்க்கு ஜோதிடர்கள் அட்வைஸ் செஞ்சாங்க..
அதுக்குதான் சிஎம் விஜய், புழல் ஸ்டேஷனுக்கு போனது.. புழல் சிறைக்கு போய் உள்ளே விசிட் பண்ணினது எல்லாமே”ன்னு சொல்றாங்க ப்ரோ.

இதை பத்தி சில ஜோதிடர்கள்கிட்ட நாம விசாரிச்சப்ப, ”கடக லக்னத்துக்கு சுக்கிரன் சில குறிப்பிட்ட அதிபதி தன்மைகளைக் கொண்டிருக்காங்க.. சுக்கிர திசையில் குரு புத்தி நடப்பது சிலருக்கு மாற்றங்களையும் சோதனைகளையும் தரலாம்.
கடக லக்னத்துல 6-ஆம் இடம் என்பது வம்பு, வழக்கு, கடன், எதிர்ப்புகளை சொல்லக் கூடியது. ஜாதகத்தில் குரு பகவான் லக்னத்தில் அதாவது ஜென்மத்தில் அமரும் காலத்தில் தேவையற்ற வீண் பழி, மன உளைச்சல் அல்லது அலைச்சல்கள் உருவாகலாம். பெரிய அளவில் சட்டச் சிக்கலோ ஜெயிலுக்குப் போவது போன்ற சூழலோ வரலாம். அப்படி வந்துவிடக் கூடாதுன்னு அப்படிங்கிறதுக்காக முன்னெச்சரிக்கையாக அதாவது ஒரு பரிகாரமாக ஜெயிக்கு போறது.. ஸ்டேஷனுக்கு போறதுன்னு செய்ய சொல்வோம்.. அதைத்தான் சிஎம் விஜய்யும் பாலோ அப் செஞ்சிருக்காரு” ன்னு சொல்றாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
