ADVERTISEMENT

‘என் கனவை சிதைக்கிறார்கள்’ – மீண்டும் ஆதாரங்களுடன் வீடியோ வெளியிட்ட மாணவன் பாரதிதாசன்

Published On:

| By Pandeeswari Gurusamy

அம்பேத்கர் அயலக உயர் கல்வி திட்டத்தின்கீழ் மலேசியாவில் ஆய்வு படிப்பை மேற்கொண்டு வரும் மாணவர் பாரதிதாசன் தனக்கான கட்டணத்தை சமூக நீதித்துறை செலுத்தவில்லை என்றும், வரலாற்றில் ரோஹித் வெமுலாவிற்கு என்ன நடந்ததோ அதுதான் என் விஷயத்தில் தமிழக அரசு நடத்துகிறது என குற்றம் சாட்டி கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், ரோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார் மாணவன் பாரதிதான். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.

ADVERTISEMENT

மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். திமுக அவரை படிக்க வைக்கும் என தெரிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து சமூக நீதித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மாணவர் முறையாக பில்களை சமர்ப்பிக்காத காரணத்தால் தான் அவருக்கு நிதி வழங்கப்பட வில்லை என விளக்கம் அளித்துள்ளது.

ADVERTISEMENT

இதைத்தொடர்ந்து மாணவன் பாரதிதாசன் உரிய ஆதாரங்களுடன் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”சமூகநீதித் துறையிலிருந்து மீண்டும் வந்து ஒரு அறிக்கையைக் கொடுத்திருந்தார்கள். 20-ஆம் தேதிக்கு நான் அனுப்பிய பில்லுக்கு வந்து, நீங்கள் பதில் அனுப்பவில்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. நான் பதில் அனுப்பினேன். பதில் அனுப்பவில்லை என்றால் அது தவறான தகவல். நான் அனுப்புன மெயில் ஒருவேளை உங்கள் ஸ்பேம்ல (Spam) ஏதாவது இருக்கா என்று செக் செய்து பாருங்கள். நான் வந்து மெயில் அனுப்பிட்டேன். இதோ, நான் ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்கு அதுக்கான பில்லை அனுப்பிட்டேன். அதற்கான ப்ரூஃப் உள்ளது.

எல்லா டீடைல்ஸும் நான் வந்து அனுப்பிட்டேன். ஆனால், நீங்க அனுப்பவில்லை என்று மறைத்து என்னை மறுபடியும் நீங்க வந்து உங்க ஐடி விங்ஸ் (IT Wings) எல்லாத்தையும் வைத்து என்னுடைய கனவை நீங்க வந்து சிதைக்கிறீர்கள். இன்னொன்னு, மாணவர் திட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்கிறீர்கள். I am humble request to the department, எத்தனை பேரு இந்த ஸ்கீம்ல (Scheme) Ph.D படிக்கிறாங்க என்பதை டிபார்ட்மென்ட் ரிலீஸ் செய்தால் நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன். எல்லாரும் மாஸ்டர்ஸ் (Masters) படிக்கிறாங்க. மாஸ்டர்ஸ்ங்கறது ஒரு வருஷம் கோர்ஸ் தான். ஒரு வருஷம் இங்க காலேஜ் ஃபீஸ் கட்டுனா மட்டும் போதும். லிவிங் எக்ஸ்பென்சஸ் (Living expenses), காலேஜ் ஃபீஸ் கட்டுனா போதும். ஆனால், ரிசர்ச் (Research) அப்படி இல்லை. நீங்க காலேஜ் ஃபீஸ் கட்டணும், ரிசர்ச்சுக்கு உண்டான எக்யூப்மெண்ட்ஸ் (Equipments) வாங்கணும், கான்ஃபரன்ஸ் (Conference) போகணும், புக் வாங்கணும், படிக்கணும். 24 மணி நேரமும் ஆய்வைப் பற்றி மட்டுமே சிந்திக்கணும்.

ADVERTISEMENT

நான் இன்னொரு விஷயம் சொல்றேன் சார்… இந்தியால வந்து JRF-ன்னு (Junior Research Fellowship) என்று ஒன்று உள்ளது. அது எனக்கு கிடைத்தது. இந்தியாலயே கிடைத்தது. சில பேர் ‘இந்தியாவில் வந்து ஏன் படிக்கல’ன்னு கேட்டாங்க. இந்தியாலயே எனக்கு கிடைத்தது. நான் இந்தியாவை விட மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இருக்கு என்பதால் இங்க வந்து படிச்சேன். இதை படிச்சா IIT லபுரொபசர் ஆகலாம். நல்ல ஒரு பெரிய வாய்ப்பு இருக்கு என்று நினைச்சு நான் இங்கு வந்து கல்வியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன். JRF கிடைச்ச சேலரியை விட்டுட்டு, அப்பா அம்மாவை வந்து ரொம்ப ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன்.

அவங்களுக்குலாம் நான் எந்த சம்பளமும் இல்லாமல் நான் இங்க வந்து ரிசர்ச் கல்விக்கு மட்டுமே நான் வந்து சம்பளமே இல்லாம நான் வந்து இங்க வந்து இந்த ஆராய்ச்சிக்கு முழுமையாக உட்கார்ந்து வேலை செய்துகொண்டு இருக்கிறேன்.

ஆனால் என் மேல மீண்டும் மீண்டும் நீங்க வந்து பெர்சனல் அட்டாக் (Personal attack) பண்றது எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. ப்ரொஃபஸர் டாக்டர்ஸ் மட்டும் நான் வந்து வருத்தம் தெரிவிச்சுக்கிறேன். இதை உண்மையை உடைச்சு பேசிடணும்னு நான் நினைக்கிறேன். நீங்க சொல்றதெல்லாம் முதல் ஆண்டுக்கு கொடுத்த பணம். ஆமாம் நீங்க 36 லட்சம் கொடுத்தீங்க, நான் 37 லட்சத்துக்கு பில்லை அனுப்பிட்டேன். ஜூன் 8-ஆம் தேதி அனுப்பிட்டேன். அதன் பிறகு நீங்க கிளாரிஃபிகேஷன் (Clarification) கேட்டீங்க, அதையும் நான் அனுப்பிட்டேன். யுனிவர்சிட்டி மூலமாக எல்லா டீடைலையும் அனுப்பிட்டேன். இப்போ நீங்க கொடுத்தது 6 months living expenses, அதுவும் முடிந்து விட்டது. நான் ரிசர்ச்சுக்கு உண்டான விஷயங்கள்ல செல்ஸ் (cells), ரியேஜென்ட்ஸ் (reagents), கன்ஸியூமபிள்ஸ் (consumables)… அது வாங்கணும், அதுக்காக எனக்கு பணம் கொடுங்க அப்படின்னு கேட்டேன். ஆனால் இப்போது வரைக்கும் அந்த பிரச்சனைக்கு முடிவே வரல. திருப்பி திருப்பி ‘பில் அனுப்பல’ அப்படின்னே நெரேட்டிவை மீண்டும் மீண்டும் சமூகநீதித் துறை வந்து என் மேல செட் பண்றாங்க.

அப்படினால் இந்த டாக்குமென்ட்க்கு அவங்க என்ன பதில் சொல்றாங்க? இந்த விஷயங்களுக்கு அவங்களுடைய பதில் என்ன? ஜூன் 8-ஆம் தேதி, இப்ப ரீசண்டா யுனிவர்சிட்டி அனுப்புன மெயிலுக்கு அவங்களோட பதில் என்ன? ஒரிஜினல் டாக்குமென்ட்டையே நான் காட்டுறேன். இதில் இருக்குற ரிசர்ச்சுக்கு உண்டான எல்லா பில்லையும் நான் ஜூன் 8-ஆம் தேதியே அனுப்பிட்டேன். திருப்பி கேட்டீங்க, திருப்பி அதுக்கான விளக்கத்தையும் கொடுத்துட்டேன்…” என தெரிவித்துள்ளார்.

மாணவன் பாரதிதாசனின் இந்த வீடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பதிவில், மலேசியாவில் படிக்கும் மாணவர் பாரதிதாசன் அவர்களின் கல்வித் தொகை விடுவிக்க வேண்டி சமூக நீதித்துறை அமைச்சர் மாண்புமிகு. வன்னியரசு அவர்களிடம் நான்கு முறை பேசி உள்ளேன். ஒரு பகுதி உதவித்தொகை விடுவிக்கப்பட்டது.

காரணம் என்னவாக இருந்தாலும் அவருடைய படிப்பு பாதிக்கும் வகையில் அரசு நடந்து கொள்ளக் கூடாது.

எனவே, உடனடியாக மீதி உதவித்தொகை முழுவதையும் அவருக்கு கிடைக்கச் செய்ய முதலமைச்சர் அவர்கள் நேரடியாக தலையிட்டு உதவிட வேண்டுகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

மேலும் நீலம் பண்பாட்டு மையம் தனது எக்ஸ் பதிவில்,”மலேசியாவில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர் பாரதிதாசன் ராமனின் Research & Living Expenses நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாத வகையில் அரசு நிரந்தரத் தீர்வை உருவாக்க வேண்டும். ஜெய் பீம்!” என தெரிவித்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share