குழந்தைகள் காய்கறி சாப்பிட மறுக்கிறார்களா? பீட்ரூட்டில் இப்படி 2 ஸ்வீட் செய்து பாருங்க!

Published On:

| By Minnambalam Desk

காய்கறி என்றாலே குழந்தைகள் முகம் சுளிப்பது பல வீடுகளில் தினசரி பிரச்சனைதான். குறிப்பாக, பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொடுப்பது சற்று சவாலாக இருக்கும். இதற்கு ஒரு சுவையான வழியாக பீட்ரூட்டை வைத்து அல்வா, ஜெல்லி என இரண்டு வகையான இனிப்புகளை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

முதலில் செய்ய வேண்டியது என்ன?

பீட்ரூட் அல்வா செய்ய 250 கிராம் பீட்ரூட், அரை லிட்டர் பசும்பால், சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, நெய், ஏலக்காய் பொடி மற்றும் சிறிதளவு உப்பு தேவைப்படும்.

ADVERTISEMENT

பீட்ரூட்டைத் தோல் நீக்கி துருவிக்கொள்ள வேண்டும். நெய்யில் முந்திரி, உலர் திராட்சையை வறுத்து தனியாக வைத்துவிட்டு, அதே பாத்திரத்தில் பீட்ரூட்டைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பால் சேர்த்து அல்வா பதம்

ADVERTISEMENT

பீட்ரூட் நன்றாக வெந்ததும் பசும்பாலை ஊற்றி மிதமான தீயில் வேகவிட வேண்டும். பின்னர் சர்க்கரை சேர்த்து தொடர்ந்து கிளற வேண்டும்.

பீட்ரூட்டும் பாலும் சேர்ந்து கெட்டியாகி, பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றைச் சேர்த்தால் மணமான பீட்ரூட் அல்வா தயார்.

ADVERTISEMENT

வீட்டிலேயே பீட்ரூட் ஜெல்லி

ஜெல்லி செய்ய அரை கிலோ பீட்ரூட், 50 கிராம் அகரகர் மற்றும் தேவையான அளவு சர்க்கரை போதும்.

பீட்ரூட்டைச் சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அகரகரை தண்ணீரில் நன்றாகக் கரைத்து, அதனுடன் சர்க்கரை மற்றும் பீட்ரூட் சாற்றைச் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பின்னர் ஆறவைத்து மோல்டில் ஊற்றி 2 முதல் 3 மணி நேரம் வைத்தால் வீட்டிலேயே ஜெல்லி தயாராகிவிடும்.

காய்கறியைத் தனியாக சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு, பீட்ரூட்டைப் பிடித்தமான இனிப்பு வடிவில் கொடுக்க இந்த இரண்டு ரெசிபிகளும் உதவும்.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share