பியூட்டி டிப்ஸ்: உங்கள் சருமத்துக்கு ஓய்வு கொடுப்பதும் அவசியம்!

Published On:

| By Selvam

தினமும் மூன்று வேளைகள் சாப்பிடுகிறோம்… அதிலிருந்து ஓய்வு கொடுக்க, வாரம் ஒருநாள் விரதம் இருப்போம் அல்லவா..? சருமத்துக்கும் அப்படியோர் ஓய்வு நிச்சயம் அவசியம். சருமத்துக்குக் கொடுக்கும் அத்தகைய ஓய்வை, ‘ஸ்கின் ஃபாஸ்ட்டிங்’ (Skin fasting) என்கிறார்கள் சருமநல மருத்துவர்கள். மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் இதைப் பின்பற்றலாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.

“நமது சருமத்தைப் பொறுத்தவரை, 28 நாள்களுக்கொரு முறை செல்கள் உதிர்ந்து புதிய செல்கள் உருவாகும் சுழற்சி நடந்துகொண்டே இருக்கும். சருமப் பராமரிப்புக்காகப் பல பொருள்களை உபயோகிக்கிறோம். அவற்றில் ரெட்டினால், சாலிசிலிக் ஆசிட் உள்ளிட்ட பல பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றை ஸ்கின் ஆக்டிவ்ஸ் என்று குறிப்பிடுகிறோம். சிலர் அதீத அக்கறை எடுத்துக் கொள்வதாக நினைத்துக்கொண்டு இந்தப் பொருள்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்துவதுண்டு.

ADVERTISEMENT

அப்படிச் செய்யும்போது, சருமத்தின் மேலுள்ள பாதுகாப்பு லேயர் பாதிக்கப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் சருமம் சிவந்து போவது, சென்சிட்டிவ்வாக மாறுவது போன்ற பிரச்சினைகள் வரக்கூடும். இதனால்தான் சருமப் பராமரிப்பு பொருட்களை தொடர்ந்தும் அளவுக்கதிகமாகவும் உபயோகிக்க வேண்டாம். `ஸ்கின் ஃபாஸ்ட்டிங்’ பின்பற்றும்போது சருமப் பராமரிப்புக்கு அடிப்படையான மாய்ஸ்ச்சரைசர், சன் ஸ்கிரீன் போன்றவற்றை நிறுத்த வேண்டியதில்லை.

அதேபோல சருமப் பிரச்னைகளுக்காக மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம், ஆயின்மென்ட் போன்றவற்றையும் நிறுத்த வேண்டியதில்லை. மற்றபடி ஸ்கின் ஆக்டிவ்ஸ் உள்ள தயாரிப்புகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். `ஸ்கின் ஃபாஸ்ட்டிங்’ இருக்கும்போது ஃபேஷியல் செய்வதைத் தவிர்க்கலாம். நிறைய தண்ணீர் குடிப்பது, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றைச் சாப்பிடுவது என சரும ஆரோக்கியத்துக்கான விஷயங்களில் கவனம் செலுத்தலாம். கடலை மாவு, தயிர், மஞ்சள், கற்றாழை ஜெல் போன்றவற்றையெல்லாம் தடவுவதையும் தவிர்க்கலாம்” என்று பரிந்துரைக்கிறார்கள்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் காதுகள் அடைத்துக்கொள்கிறதா? காரணமும் தீர்வும்!

ADVERTISEMENT

டாப் 10 நியூஸ்: ஜானகி நூற்றாண்டு விழா முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை!

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share