பியூட்டி டிப்ஸ்: மாசு மருக்களைப் போக்கும் முல்தானி மட்டி!

Published On:

| By christopher

அழகுக்கு அழகு சேர்க்கும் பொருட்களில் முக்கிய இடம்பெறுவது முல்தானி மட்டி. சருமத்தை சுத்தப்படுத்தவும், வெளுப்பாக்கவும் (ப்ளீச்சிங்), உலர்ந்த செல்களை நீக்கவும் (ஸ்கிரப்பிங்), எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை உறிஞ்சி எடுக்கவும் முல்தானி மட்டி முக்கியப் பங்கு வகிக்கிறது. beauty tips multhani matti

முல்தானி மட்டியை சுத்தமான பன்னீரில் குழைத்து, ஒரு சிறிய பிரஷ்ஷால் முகத்தில் தடவி வைத்திருந்து (தேய்த்தல் கூடாது), 10 நிமிடங்கள் கழித்து, தண்ணீரால் கழுவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு மேல் அந்த பேக்கை வைத்திருக்கக் கூடாது. வெளியே செல்லும் முன், முல்தானி மட்டி போட்டு முகத்தைச் சுத்தப்படுத்தினால், முகம் பளீரென இருக்கும்.

ADVERTISEMENT

கால் கட்டு புதினா இலைகளின் விழுது, 50 வேப்ப இலைகளின் விழுது… இவற்றுடன், 2 டீஸ்பூன் முல்தானி மட்டியைக் கலந்து, முகப் பருவின் மீது போட்டு வந்தால், பருக்கள் விரைவில் மறையும். வேம்பு, மிகச் சிறந்த கிருமிநாசினி. புதினா, பருவைக் காயச் செய்யும்.

முகத்தில் வரும் கரும்புள்ளி, வெண்புள்ளிப் பிரச்சினைக்கு, பலரும் பார்லரையே தேடிப் போகிறார்கள். பார்லர் கருவிகளால் நோய்த்தொற்று ஏற்பட்டு, திரும்பத் திரும்ப வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால், முல்தானி மட்டியுடன் வேப்பிலை விழுதைக் கலந்து தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால், இந்தப் பிரச்சினையை அடியோடு தீர்க்கலாம்.

ADVERTISEMENT

கோடைக்காலத்தில் முல்தானி மட்டி பயன்படுத்தும்போது, சிலருக்கு முகத்தில் எரிச்சல் ஏற்ப டலாம். அவர்கள் முல்தானி மட்டியுடன் தூய்மையான சந்தனத்தூளைக் கலந்து பூசலாம். எரிச்சல் குறைந்து, குளுமையாக இருக்கும்.

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share