VIDEO: வடிவேலு- பிரபுதேவா கூட்டணியில் “பேங் பேங்” டீசர் ரிலீஸ்!

Published On:

| By Mathi

"Bang Bang" teaser released featuring the Vadivelu-Prabhu Deva combo

சாம் ரோட்ரிகஸ் இயக்கி வடிவேலு- பிரபுதேவா நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

காதலன், ராசைய்யா, மனதை திருடிவிட்டாய், எங்கள் அண்ணா, காதலா காதலா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ், எங்கள் அண்ணா ஆகிய படங்களில் பிரபுதேவாவுடன் வடிவேலு இணைந்து நடித்திருந்தார். இருவரும் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் ரீல்ஸ் மெட்டீரியலாக இருக்கின்றன.

ADVERTISEMENT

தற்போது சாம் ரோட்ரிக்ஸ் இயக்கியுள்ள ஜோம்பி த்ரில்லர் காமெடி படம் ‘பேங் பேங்’. இந்த படத்தில் வடிவேலு- பிரபுதேவா நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர், சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது. அதில், Cow Boy வேடத்தில் பிரபுதேவாவும் வடிவேலும் சண்டையிடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா.

BANG BANG TEASER | Prabhu Deva, Vadivelu | Sam Rodrigues | Yuvan Shankar Raja | Kannan Ravi Groups
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share