தந்தூரிக்கு தடை : வறுத்தெடுக்கும் உணவு பிரியர்கள்!

Published On:

| By Kavi

டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. எனவே காற்றின் தரத்தை மேம்படுத்த டெல்லி அரசு ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதாவது, நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தி இயங்கும் பாரம்பரிய தந்தூரி அடுப்புகளுக்கு முழுமையாக தடை விதித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த முடிவு, குளிர்காலத்தில் மோசமடையும் காற்றின் தரத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை என டெல்லி அரசு கூறுகிறது.

கடந்த சில வாரங்களாக டெல்லியின் காற்றின் தரக் குறியீடு (AQI) “மிகவும் மோசமான” மற்றும் சில சமயங்களில் “அபாயகரமான” அளவை எட்டியிருக்க்றது. இந்த மோசமான சூழலுக்கு வாகனப் புகை, தொழிற்சாலைகள், குப்பைகள் எரிப்பு போன்ற பல காரணங்கள் இருந்தாலும், உணவகங்கள் மற்றும் சாலையோரக் கடைகளில் பயன்படுத்தப்படும் தந்தூரி அடுப்புகளில் இருந்து வெளிவரும் புகையும் கணிசமாக பங்களிப்பதாக கூறி இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

டெல்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு (DPCC) வெளியிட்டுள்ள உத்தரவின்படி, டெல்லியில் உள்ள அனைத்து உணவகங்கள், ஹோட்டல்கள், தாபாக்கள் மற்றும் சாலையோர உணவுக் கடைகள் என எங்கும் நிலக்கரி அல்லது விறகுகளைப் பயன்படுத்தி தந்தூரி அடுப்புகளை இயக்க அனுமதி இல்லை. நிலக்கரி அல்லது விறகுகளுக்குப் பதிலாக மின்சாரம் அல்லது எரிவாயு அடிப்படையிலான தந்தூரி அடுப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறும் உணவகங்கள் அல்லது நிறுவனங்களுக்கு 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவேஇனி உணவங்களில் இருந்து சுவையான தந்தூரி சிக்கனை உணவு பிரியர்களால் ருசிக்க முடியாது.

மின்சாரம் மற்றும் எரிவாயு தந்தூரிகள் பாரம்பரிய முறையில் தயாரிக்கும் தந்தூரியின் சுவையை கொடுக்காது.

எனவே டெல்லி அரசை நெட்டிசன்கள் வருத்தெடுக்க ஆரம்வித்துள்ளனர்.

இந்த தடை விதிக்கப்பட்ட பின்னரும் காற்று மாசு குறையவில்லை என்பதை குறிப்பிடும் வகையில், டெல்லியின் தற்போதைய நிலைமையை ட்விட்டரில் ஒரு பயனர் வீடியோவாக எடுத்து போட்டுள்ளார். அதில் காற்று மாசுவை குறைக்க தந்தூரிக்கு தடை விதிப்பது சரியாகுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பயனர் டெல்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க ஆம் ஆத்மி அரசு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் பாஜக அரசு எடுத்த நடவடிக்கைகளை ஒப்பிட்டு கேலியாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனம் ஓட்டுபவர்கள் தங்கள் எஞ்சினை ஆப் செய்ய வேண்டும். காற்று மாசு அதிகரிக்கும் போது கட்டுமான தொழில் செய்யக் கூடாது போன்ற நடவடிக்கைகளை ஆம் ஆத்மி அரசு எடுக்கும். ஆனால் பாஜக அரசு தந்தூரியை தடையை செய்திருக்கிறது என்று கிண்டலடித்துள்ளார்.

இன்னொருவர், முதல்வர் ரேகா குப்தா தந்தூரியை தடை செய்ததால், இப்போது டெல்லியில் இருந்து இமயமலையை காணும் அளவுக்கு தெளிவாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share