ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.


திருவனந்தபுரம் வடக்கு – தாம்பரம் சிறப்பு ரயில் (06164) அக்டோபர் 20-ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் புதன்கிழமை காலை 11 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கத்தில் தாம்பரம் – திருவனந்தபுரம் வடக்கு சிறப்பு ரயில் (06163) அக்டோபர் 21-ந் தேதி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குத் தாம்பரத்திலிருந்து புறப்பட்டு, மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்குத் திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில்கள்
- செங்கல்பட்டு
- விழுப்புரம்
- விருத்தாசலம்
- திருச்சி
- திண்டுக்கல்
- மதுரை
- விருதுநகர்
- சாத்தூர்
- கோவில்பட்டி
- திருநெல்வேலி
- வள்ளியூர்
- நாகர்கோவில்
- திருவனந்தபுரம் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி கொண்ட 16 பெட்டிகள், சாதாரண படுக்கை வசதி கொண்ட 2 பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியுடன் கூடிய இரண்டாம் வகுப்புப் பெட்டி ஒன்று, சரக்குகள் மற்றும் பிரேக் வேன் பெட்டி ஒன்று என மொத்தம் 20 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இரு மார்க்கங்களிலும் தலா ஒரு முறை மட்டுமே இந்தச் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
