தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். atal pension yojana benefits
அடல் ஓய்வூதிய திட்டத்தின் சிறப்பு என்னவெனில் அரசு பணியில் இல்லாதவர்களும், ஓய்வுகாலத்தில் பென்ஷன் பெறலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 18 முதல் 40 வயது வரையிலான அனைத்து இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர், தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது அஞ்சல் நிலையத்திலிருந்து தொடங்கிக் கொள்ளலாம்.
தற்போது இதனை ஆன்லைனிலும் E- KYC மூலமாக இணையும் வசதியும் உள்ளது.

இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், ஒரு சந்தாதாரர் 60 வயதுக்கு பின்னர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை முழுமையாக கிடைக்கும்.
ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு அந்த தொகை கிடைக்கும். மொத்தத்தில் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு பயனுள்ள திட்டமாகும்.
ஒருவேளை சந்தாதாரர் மற்றும் அவரது நாமினி இறந்துவிட்டால், அவர்களது வாரிசுகளுக்கு அந்தத் தொகை கிடைக்கும்.
18 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் எனில். தினசரி 7 ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பணம் செலுத்த வேண்டிய வருடம் 42 வருடங்களாகும்.
இதன் மூலம் உங்கள் 61 வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள். ஒருவேளை 18 வயதுக்கு மேல் நீங்கள் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் எனில், அதற்கு ஏற்றவாறு உங்களது முதலீடு அமையும்.
பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ED அதிகாரி அங்கித் திவாரியை விஜிலென்ஸ் விசாரிக்க தடையில்லை: மதுரை உயர்நீதிமன்றம்
கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு: எடப்பாடிக்கு சம்மன்!
atal pension yojana benefits
