ஆசியகோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி சாம்பியன்!

Published On:

| By Selvam

ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எட்டாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

இந்தியா இலங்கை அணிகள் மோதிய ஆசியகோப்பை இறுதிப்போட்டி இலங்கை பிரமேதாசா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ADVERTISEMENT

இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இதனால் களமிறங்கிய வேகத்திலேயே நடையை கட்டினர். பதும் நிசாங்கா (2),  சமராவிக்ரமகா( 0), அசலங்கா (0), தனஞ்செயா டி செல்வா (4), தசன் ஷனகா (0) என இலங்கை முன்னணி பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆனார்கள். இதனால் 15.3 ஓவர்களில் இலங்கை அணி 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ADVERTISEMENT

51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் சுப்மன் கில், இஷான் கிஷன் களமிறங்கினர். இரண்டு வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தனர். இதனால் 6.1 ஓவர்களில் இந்திய அணி 51 ரன்களை கடந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி 8-ஆவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

ADVERTISEMENT

செல்வம்

யஷோபூமி மாநாட்டு மையத்தை திறந்து வைத்தார் மோடி

சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share