பிரதமர் மோடி தனது பிறந்தநாளான இன்று (செப்டம்பர் 17) டெல்லி துவாரகாவில் கட்டப்பட்டுள்ள யஷோபூமி சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மெட்ரோவில் பயணம் செய்தார். அப்போது அவர் பயணிகளுடன் உரையாடினார். டெல்லி விமான நிலையத்தின் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பாதையை நீட்டிக்கும் திட்டத்தையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
யஷோபூமி கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி அடைந்ததும் கைவினை கலைஞர்களுடன் கலந்துரையாடினார். யஷோபூமி மற்றும் டெல்லி மெட்ரோ விரிவாக்க பணிகளை தொடங்கிய பின்னர் விஷ்வகர்மா திட்டத்தை துவக்கி வைத்தார்.
இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் பிரதமர் மோடி பேசும்போது, “பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ரூ.3 லட்சம் கடன் தொகை வழங்கப்படும். இதற்கான வட்டித்தொகையும் மிகவும் குறைவு. முதலில் ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படும்.
இந்த கடனை செலுத்திய பிறகு கூடுதலாக ரூ.2 லட்சம் வழங்கப்படும். இன்று திறக்கப்பட்டுள்ள யஷோபூமி சர்வதேச கண்காட்சி மையம் விஷ்வகர்மா கலைஞர்களுக்கு உதவியாக இருக்கும். இந்திய கைவினை கலைஞர்கள் செய்த பொருட்களை உலக தரத்திற்கு எடுத்துச்செல்ல இந்த இடம் பயனுள்ளதாக இருக்கும். நமது உடலில் முதுகெலும்பு எவ்வளவு முக்கியமோ அதே போல சமூகத்தில் விஸ்வகர்மா பயனாளிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்கள் இல்லாத நாளை கற்பனை செய்து பார்க்கமுடியாது” என்று தெரிவித்தார்.
செல்வம்
“தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை” – துரை வைகோ
சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!